Headlines

இலங்கையிலும் : ஆபத்தான புகையிரத பயணம்

இந்தியாவையடுத்து இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட்சி பதிவாகியுள்ளது. களனி – பியகம வீதியின் களுபாலத்தின் கீழ் கொள்கலன் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதால் புகையிரத சேவைகள் தாமதமாகின. குறித்த விபத்தினால் இரு புகையிரத பாதைகள் சேதமடைந்து, பிரதான புகையிரத சேவைகளின்   போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டன. இதனால் புகையிர நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்து நின்றவர்கள்  வேறு புகையிரதங்களில் ஏறி பயணத்தை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற…

Read More

இன்று முதல் விசேட பஸ் சேவைகள்!

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதிவேக வீதிகளிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

Read More

அநீதிக்கு துணைபோக மாட்டேன் – உபவேந்தர் நாஜீம்

-எம்.வை.அமீர்- தற்போது நான் இப் பல்கலைக்கழகத்தில் 10 மாதங்கள் கடமையாற்றியுள்ளேன். இறைவன் நாடினால் இன்னும் 5 வருடங்களும் 2 மாதங்களும் இங்கு கடமையாற்ற முடியும்.  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், நிர்வாக மற்றும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவன் என்ற வகையில், எனது பதவிக்காலத்தில் இங்கு கடமையாற்றும் எந்த ஊழியர்களுக்கு எதிராகவும் அநீதியான முறையில் நடக்கவும் மாட்டேன். அதேபோன்று அவ்வாறான செயல்களுக்கு துணைபோகவும் மாட்டேன். என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தின் 18 வது…

Read More

மின்சார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் முயற்சி

திட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்த மின்சார சபையில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையைக் குழப்பி மின் நெருக்கடியை தோற்றுவிக்க மின்சார சபையில் உள்ள சிலர்…

Read More

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை

பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து…

Read More

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக ஞானரத்ன தேரர் தெரிவு

பௌத்த பீட சியாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் அனுநாயகத் தேரரான வண. வரகாகொடை ஞானரத்தன தேரர் இன்று மாலை  அஸ்கிரிய பீடத்தின் 22 வது மகாநாயக்கத் தேரராக தெரிவு செய்யப்பட்டார். அஸ்கிரிய பீடத்தின் பௌத்த தேரர்களது நிர்வாக சபையினர் ஒன்று கூடி அவரைத் தெரிவு செய்தனர்.  ஆஸ்கிரிய பீடத்தின் 21 வது மகாநாயக்கராக பதவிவகித்து மரணமான கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி அவர்களது இடத்திற்கே இவர் 22 வது மகாநாயக்கராகத் தெரிவானார். ராஜகருனா நவரத்தன அத்தபத்து வாசல…

Read More

பொது எதி­ர­ணி­யி­லி­ருந்து மேலும் பலர் அரசில் இணைவர்

பாரா­ளு­மன்­றத்தில் பொது எதி­ர­ணியின் பலம் தேய்­வ­டைந்து வரு­கின்­றது. இதன்­படி மேலும் பலர் விரைவில் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­க­வுள்­ளனர். இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாக பொது­நிர்­வாக மற்றும் அரச முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். மேலும் சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட ஆயுதம் தொடர்பில் மாயை உரு­வாக்க முனை­கின்­றனர். பொது எதி­ர­ணியின் தேவைக்கு ஏற்றால் போல் விசா­ர­ணை­களை நாம் நடத்­த­போ­வ­தில்லை. தேசிய ஆடை­யுடன் அன்றி கோர்ட் சூட் அணிந்து ஜெனீவா சென்ற பொது எதி­ர­ணியின் செயல் வெட்க…

Read More

பாரவூர்தி இறுகியதில் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

பேலியகொட  கலு பாலத்தின் அருகில் பாரவூர்தியொன்று இறுகியமையினால் அப்பகுதி வழியேயான போக்குவரத்து பெரும் பாதிப்பபுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள்தெரிவித்தார். மேலும், குறித்த பாரவூர்தி விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்காரணமாக ரயில சேவைகளும் தாமதமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன் சாரதிகளும் தங்களது வாகனங்களை சீராக ஓரங்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனடிப்படையில், அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Read More

பரஸ்பரப் புரிந்துணர்விலேயே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கியுள்ளது

சகோதர இனங்களுடன் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ்வதன் மூலமே மீள்குடியேற்றத்தின் வெற்றி தங்கி உள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் மீள்குடியேறிய மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 25 ஆண்டுகள் தென்னிலங்கை அகதி முகாம்களில் நாம் பட்ட கஷ்டங்கள் போதும். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளுக்காக நமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதேபோன்று மாற்றுச் சமூகத்தைச்…

Read More

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

புகையிரத சேவைகள் ரத்து..!

புத்தளம் புகையிரத பாதையின் சீதுவ மற்றும் கட்டுநாயக்க நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றை அமைக்கும் நோக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் 6 மணிவரை புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் புகையிரத சேவையிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சில சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இராவணனைத் தேடி புறப்பட மற்றொரு குழு

இராவணனின் சுய நினைவற்ற உடல் தற்போதும் இருப்பதாக கூறி இளைஞர் குழு ஒன்று பண்டாரவெல- கரந்தகொல்ல வனப் பகுதிக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மொரட்டுவ பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் உட்பட 9 பேர் அடங்கிய குழு ஒன்று இராவணனை தேடி குறித்த குகைக்குச் சென்று ஒன்றும் கிடைக்காது திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் தற்போது நிலவி வரும் இராவணன் பற்றிய கருத்துக்கள் காரணமாகவே இந்த இளைஞர் குழுவும் இராவணனை தேடி செல்லவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More