Headlines

மே மாதத்திலும் அனல் பறக்கும் வெப்பம்!

இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

காலி – மாத்தறை ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.!

ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் காலி வக்வெல்ல பகுதியில்  நேற்று (17) trainதடம்புரண்டது. இதனையடுத்து, காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.

Read More

சிறுநீரக கடத்தல்: பிரதான சந்தேக நபர் தப்பியோட்டம்

சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் எட்டுப் பேரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேக நபரான லக்ஷ்மன் குமார என்பவரே தப்பிச் சென்றுள்ளதாக இன்று (18) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.

Read More

லக்கலை விவகாரம்: விசாரணைகள் தீவிரம்

லக்கலை பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன ஆயுதங்கள் தொடர்பாக 100 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கலை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் உட்பட பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள மக்களிடமும் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணாமல்போய் பின்பு மீட்கப்பட்ட ஆயுதங்கள் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆயுதங்களில் உள்ள கைரேகைகளை இனங்காண்பதற்காகவே குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிடம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. லக்கலை பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி ஆயுதங்கள்…

Read More

சு.க எம்.பி.க்கள் தனித்துப் பேச்சு

தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இவ்வாரத்தில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிரணியின் கொள்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடைமுறை நடைமுறைச் செயற்றிட்டங்கள் தொடர்பில், இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என்று சு.க.வின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாங்கள் தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்தப்போவதாக, கூட்டு எதிரணியினர் கடந்த…

Read More

நெல் கொள்வனவு மீண்டும் ஆரம்பம்

நெல் கொள்வனவானது இன்று (18) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் கொள்வனவானது மீண்டும் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஒரு இலட்சத்து 25ஆயிரம் மெட்றிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்ய எதிர் பார்த்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

34 ஆவது பொலிஸ் மா அதிபர் இன்று நேர்முகப் பரீட்சை

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும் தகைமைகளை பரீட்சித்துப் பார்க்க அரசியலமைப்புசபை தீர்மானித்துள்ளது. அதன்படிசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜயசுந்தர,சந்தன விக்ரமரத்ன ஆகியோர் இன்று (18) பாராளுமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அரசியலமைப்பு சபை பாராளுமன்றில் கூடவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்யும் பணி இடம்பெறவுள்ளது. இந் நிலையிலேயே பதில் பொலிஸ்…

Read More

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி!

பாதுக்க – முருதகஹஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,மரண பரிசோதனைகள் இன்று (18) இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

ஒத்­து­ழைப்பு வழங்க மஹிந்த இணக்கம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளனர். கடந்த வாரம் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக ஆங்­கில ஊடகம் ஒன்று தெரி­வித்­துள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விற்கும் இடையில் பிர­த­மரின் சீன விஜ­யத்­திற்கு முன்னர் நடை­பெற்ற சந்­திப்­பினைத் தொடர்ந்து இந்த சந்­திப்பு நடத்­தப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­திக்கும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான சந்­திப்பின் போது சில இணக்­கப்­பா­டுகள் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன்­போது அர­சியல் விவ­கா­ரங்­களில் ஒத்­து­ழைப்பு…

Read More

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதியின் வத்தளை – மாபோலை பகுதியில் கொள்கலன் பார ஊர்தியொன்று மின் கம்பத்தில் விபத்திற்குள்ளானதினாலேயே பிரதான வீதி ஊடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது

புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வண்ணாத்திவில்லு காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் டேற்கொண்ட சுற்றவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்ற கடந்த சில தினங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகமான எரிபொருள் கேள்வி நிலவியதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் இருந்தமையை குறிப்பிடத்தக்கது.

Read More