Headlines

குளியாப்பிடியாவில் 3 கைக்குண்டு மீட்பு.!




குளியாப்பிடிய – ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய விகாரை சந்தியில் இன்று காலை 3 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குளியாபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு நீதவானின் அறிவுரையின் கீழ் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *