Headlines

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கிராமத்தைச் சேர்ந்த 6  பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் தவபுத்திரன் (வயது 41)  என்பவரே உயிரிழந்துள்ளார். வயலில் வேலையை முடித்;துவிட்டு, குறித்த விவசாயி வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானார்.

Read More

மின்னல் தாக்கங்களினால் 79 பேர் பலி: இந்தியாவில்!

இந்திய மாநிலங்களான பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தை தாக்கிய மின்னல்களினால் குறைந்தது 79 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பீஹாரில் 53 பேர் கொல்லப்பட்டதுடன், கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் பத்து பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், மத்திய பிரதேசத்தில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (21) பெய்த கடுமையான மழையினுள், தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே பெரும்பாலானவர்கள் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால மழையின்போது இந்தியாவில் மின்னல் தாக்குதல்கள் வழமை என்றநிலையில், தேசிய குற்றப் பதிவுகள் முகவராண்மையின்படி, 2005ஆம்…

Read More

மின்னல் தாக்கத்தில் 65 பேர் பலி

பங்களதேஷில் நிலவுகின்ற மோசமான காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி, 65 பேர் பலியாகியுள்ளனனர் என்று பங்களாதேஷ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்நாட்டில், மிகவும் பின்தங்கிய வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் சி.என்.என் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி

பதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இழக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன்…

Read More

மின்னல் தாக்கி நான்கு யானைகள் பலி

அநுராதபுரம், மஹாவிளாச்சி பகுதியில், மின்னல் தாக்கி யானைக்குட்டிகள் முன்று உட்பட நான்கு யானைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த யானைகள் நான்கையும்  எள்ளுப் பயிற்செய்கை நிலத்திலிருந்து, கிராமவாசிகள் மீட்டுள்ளனர்.

Read More

மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீக்கிரை!

அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (19)  இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அவிஸ்ஸாவெல பொலிஸாரும்,பிரதேசவாசிகளும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்றும்,ஆனால் வீட்டிலிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

மின்னல் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

நாட்டில் இன்று ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் சகல பகுதிகளிலும் வாழ்கின்ற பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Read More