Headlines

வலயக் கல்வி அலுவலகத்தில் தீ

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தீ விபத்தால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மின்சாரக் கோளாரே இந்த தீப் பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Read More

ஆட்டுக்கொட்டிலில் தீ பரவியதில் 47 ஆடுகள் இறந்துள்ளன

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில்லிக்கொடியாறு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை (ஜுன் 29, 2016) ஆட்டுக் கொட்டில் தீப்பற்றி எரிந்ததில் அந்தக் கொட்டிலில் அடைக்கப்பட்ட ஆடுகளில் சுமார் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து மடிந்துள்ளதாக அதன் உரிமையாளரான கந்தப்போடி விஸ்வநாதன் (வயது 38) தெரிவித்தார். மொத்தமாக தன்னிடமிருந்த 56 ஆடுகளில் 47 ஆடுகள் தீயினால் கருகி இறந்து போக மீதமாக 9 ஆடுகளே தீக்காயங்களுக்கு உட்பட்டு எஞ்சியிருப்பதாகவும் அவர் மேலும்…

Read More

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து : ஒருவர் பலி

மாரவில – முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறித்த கட்டிடமும் சேதமடைந்துள்ளது. குறித்த நபர் குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக்கொண்டிருக்கும் போது, குளிர்சாதன பெட்டியின் காற்று அழுத்தி வெடித்ததன் காரணமாகவே தீ பரவியுள்ளது. இதன்பின்னர், காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

எப்பாவல தீயில் FCID பத்திரங்களும் கருகின

எப்பாவல பொஸ்பரேட், தொழிற்சாலையில் பல பிரிவுகளில் இன்று பரவிய தீ காரணமாக, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய பல பத்திரங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீவிபத்து சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம்இடம்பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்தது தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத்தீயினால் பல வார்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநோயாளர் பிரிவு எரிந்துள்ளதால் நோயாளிகளுக்கு தேவையானசிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குருநாகல்வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சந்தன கந்தன்கம…

Read More

பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி கட்டிடத்துக்கு அருகில் தீ விபத்து. (படங்கள்)

பம்பலபிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அண்மையில் திடீர் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது. மெஜஸ்டிக் சிட்டியிற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் வர்த்தகக் கட்டடத் தொகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரபட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Read More

மொரட்டுவ பல்கலை தீ விபத்துக்கான காரணம்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடமொன்றில் ஏற்பட்ட இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (4) பெய்த கடும் மழை காரணமாக மின்னல் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என சந்தேககிக்கப்பட்ட போதும் இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொரட்டுவ கட்டுபெத்தவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு சொந்தமான கட்டடமொன்றின் இரண்டாம் மாடியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. மொரட்டுவ மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸ…

Read More

மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீக்கிரை!

அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (19)  இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அவிஸ்ஸாவெல பொலிஸாரும்,பிரதேசவாசிகளும் இணைந்து தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்றும்,ஆனால் வீட்டிலிருந்த சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்

ராஜகிரிய – நாவல பகுதியில் எரிவாயு கசிவு காரணமான வீடு தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் பரவிய தீயை கோட்டை மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

அக்கரப்பத்தனை தோட்ட குடியிருப்பில் தீ

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவின் குடியிருப்பில்  இன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில்  தீ பரவியுள்ளது. இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள், சீருடை என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேவேளை இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த…

Read More

ஓவன் மேல் சார்ஜில் போடப்பட்டிருந்த தொலைபேசி தொடர்பிலான அதிர்ச்சி தகவல்

– எம்.எப்.எம்.பஸீர் – தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் அவரது குடும்பத்தார் சகிதம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினர்  விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தீ எப்படி ஆக்கிரமித்தது, அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையை அறியவும் மரணமடைந்த நால்வரின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதை உருதி செய்துகொள்ளவுமே மேலதிக விசாரணைகள்…

Read More