Headlines

மாளிகைக்காடு நகரில் சதொச திறந்து வைப்பு!




– அஸ்லம் எஸ்.மௌலானா –

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு நகரில் லங்கா சதொச கிளை ஒன்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில், வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஷாட் பதியூதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சுபைதீன் ஹாஜியார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த சதொச கிளை நிறுவப்பட்டுள்ளது.

இங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.

SATHOSA-1

SATHOSA-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *