Headlines

எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் உச்சம்!

எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து 09 நாட்களுக்கு நாட்டின் வடக்கு உட்பட சில பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி சூரியன் உச்சம் கொடுக்கும் நாட்களில் கடுமையான வெப்பமும் சூரிய ஒளியும் காணப்படும் என்பதால் மக்கள் தமது உடல்நிலை தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Read More

நீருக்கு அடியில் ஓவியக் கண்காட்சி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வித்தியாசமான ஓவியக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. வரையப்பட்ட ஓவியங்கள் நீருக்கடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீருக்கடியில் இடம்பெற்ற இந்த ஓவியக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு பெருமளவிலான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். கடலுக்கடியில் அமையப் பெற்றுள்ள பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் காண்போரை கவரும் வகையில் அமையப் பெற்றிருந்தன. சுழியோடிகள் ஓவியங்களை கைகளில் சுமந்தவாறு ஓவியக் கண்காட்சியில் ஈடுபட்டுள்ளமை இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. சிலிக்கனால் சூழப்பட்ட வெளிப்புறங்களை கொண்டு அமைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக நியூஸ் பியுரோவை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை…

Read More

புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல்

கான் கடிகார கோபுர சுற்றுவட்டப்பகுதியில் துறைமுக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் கொழும்பு புறக்கோட்டையை சுற்றியுள்ள பாதைகளில் கடும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த போராட்டம் காரணமாக மோதரையில் இருந்து மட்டக்குளி திசைக்கு செல்லும் ரெக்லமேசன் பாதை  முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமது மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி  இப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சந்திரசிறி  மகாகமகே கூறினார்.

Read More

துறைமுக அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் ஊழியர்கள் போராட்டம்

துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் இன்று அதிகார சபையின் முன்றலில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தை துறைமுக அதிகார சபையும் அனைத்து ஊழியர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வழமையாக கிடைக்கும் சித்திரை புத்தாண்டுக்கான போனஸ் பணத்தொகையில் 8200 ரூபாவை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் துறைமுக அதிகார சபையில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறும்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த யாப்பா ஆஜர்

பாரிய இலஞ்ச ஊழல் மோசடி எதிர்ப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆஜராகியுள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்சி நிறுவனத்தில்  இடம்பெற்றதாக கூறப்படுகின்ற அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தியமை மற்றும் மேலும் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக  இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்காவின் மேலும் பல போர்க்கப்பல்கள் இலங்கை வரும்!

அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்தார். அமெரிக்க -இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.இதன்…

Read More

மலையகத்தில் கடும் வறட்சி

நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களிலும் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. கொஸ்லந்தை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வற்றிப்போகும் நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 658 அடி உயரமானதும் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய உயரமாக தியலும நீர் வீழ்ச்சியின் நீர்மட்டமும் பெருமளவில் குறைவடைந்துள்ளது. மலைகத்தை அண்டிய பிரதேசங்களில் அண்மைய நாட்களாக போதியவு மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் மேற்படி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைய ஆரம்பித்திருக்கும் நிலையில் மலையக மக்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள…

Read More

யாழில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தை சேர்ந்த குறித்த நான்கு மீனவர்களும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளை ரோந்துப் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஒரு இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று(05) யாழ். கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக…

Read More

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்ட 5 ஆம் கட்டம் குருநாகலில்!

‘போதைப்பொருள்  அற்ற நாடு’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது கட்டம் குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) பிற்பகல் 2.00 மணிக்கு குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்ரீ ஆட்சி – நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப போதைப்பொருள் அற்ற ஒரு இலங்கையை உருவாக்குவதனூடாக சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கான பின்புலத்தை அமைப்பதே ‘போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய…

Read More

ஐதேக பதவிகளில் மாற்றம்

பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இன்று கூடியுள்ள அக் கட்சியின் செயற்குழுவிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக ஹரீன் பிரணாந்து நியமிக்கப்பட்டுள்ளதோடு, லக்வனிதா முன்னணியின் தலைவராக பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக தேசிய…

Read More

துர்நாற்றம் வீசும் மிதக்கும் சந்தை

புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஊடாக மனிங் சந்தைக்கு வரும் பொதுமக்களே இந்த துர்நாற்றத்தினால் பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் சந்தை அமைந்துள்ள வாவி பகுதியானது பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதாலேயே இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பல்வேறு  தேவைகளுக்காக தலைநகரிற்கு வருவோரும் இதனால்…

Read More

அரசாங்கமே அனைத்தையும், செய்யுமென்ற எதிர்பார்ப்பு வேண்டாம் : சந்திரிக்கா

அரசாங்கமே அனைத்தையும் செய்யும் என்ற எதிர்பார்ப்பு கைவிடப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலவற்றை பொதுமக்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும், தனியார் துறையினருக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய காலம் வந்துவிட்டது. எனவே அரசாங்கமே அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு களையப்பட வேண்டும். பல்வேறு…

Read More