Headlines

அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) நல்லெண்ண அடிப்படையில் நேற்று முந்தினம் (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இதேவேளை, இக்கப்பலின் சிரேஷ்ட அதிகாரி, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் அவுகொயின்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து…

Read More

72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களில்  சவூதியில் இருந்து 12 பேரும் குவைத்திலிருந்து 48  பேரும் கட்டாரிலிருந்து 12 பேரும் வந்தடைந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களில்…

Read More

வட்டரக விஜித தேரர் இன்று வாக்குமூலம்

பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் பேரில் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக விஜித தேரர் இன்று(28) நாரஹேன்பிட்ட பொலிசுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட்டரக விஜித தேரர் தேசியக் கொடியை அகௌரவப்படுத்தியதாக தெரிவித்து, பொதுபல சோன விஜித தேரருக்கு எதிராக கிருலப்பன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. குறித்த இந்த முறைப்பாட்டை விசாரணை செய்ய கிருலப்பனை பொலிஸார் நடவடிக்கை எடுக்கும் போது, தனக்கு பாதுகாப்புப் பிரச்சினை காணப்படுவதாக வட்டரக விஜித தேரர் பொலிஸில்…

Read More

பாகிஸ்தான் தாக்குல் – சுமார் 60 பேர் பலி

பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவுக்கு அருகில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, குறித்த பூங்காவில் பல குடும்பங்கள் ஈஸ்டர் ஞாயிறு நிகழ்வுகளை கொண்டாடிக் கொண்டிருந்தனர் எனவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அந்தப் பகுதியிலுள்ள அனைத்து…

Read More

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில்  சிங்கவலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக…

Read More

யாப்புக்கு அப்பால் எவருக்கும் முன்னுரிமை இல்லை

– எஸ்.ரவிசான் – கட்சியின்கொள்கைகள் உட்பட யாப்புக்கு அப்பால்சென்று எந்தவொறு தரப்பினருக்கும் முன்னுரிமை வழங்க கூடாது எனவும் கட்சியினை நேசிக்கும் ஒருவரே உண்மையான மக்கள் பிரதிநிதியாக போற்றப்படுவார் எனவும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னால் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

உயிரை பறிக்கும் உஷ்ணத்திற்கு முற்றுப்புள்ளி

தொடர் உஷ்ணத்திற்கு இன்று முதல் முற்றுப்புள்ளியாக இலங்கையில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

Read More

தீர்க்கமான பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது – றிஷாத் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காஸிம் – மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம். மர்ஹூம் அஷ்ரப்…

Read More

18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அ.இ.ம.காவுடன் இணைவு

குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிண்ணியா,…

Read More

சாரதியின் நித்திரை கலக்கத்தினால் வாகனம் தடம்புரண்டது : கட்டிடம் சேதம்

கொழும்பு அட்டன் பிராதான வீதியில் கித்துள்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமுற்ற ஒருவர் கினிகத்தேன வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். கித்துள்கலை பொலிஸ்பிரிவிற்குட்பட்டு கலுகல பகுதியிலே இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. கொழும்பிலிருந்து அட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி கலுகல சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமுற்ற சாரதி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் மலசலகூடம், பாடசாலை மதில் என்பன சேதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்….

Read More

மீண்டும் மின்தடை.!

நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடையை அமுல்செய்வது தொடர்பில் மக்களுக்கு கூறுமாறு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மின்சார உற்பத்திக்கான நீர்நிலைகளில் கிரமமாக நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொறியியலாளர் சங்கத் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழ் அகதி

தமிழகத்தின் சேலம் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சேலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார் என்பவரே இவ்வாறு  தனது கழுத்தை அறுத்துக் கொண்துள்ளார். இவர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம். நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்ஸில் வந்த இவர், புது…

Read More