Headlines

கிருளப்பனையில் தீ விபத்து

கிருளப்பனையிலுள்ள கடையொன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், பிரதேச மக்கள் மற்றும் கிருளப்பனை பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Read More

மார்ச் 23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!

2016 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எதிர்வரும் முதல் 23ஆம் திகதி மாலை 3.09 மணி முதல் 7.24 வரை தோன்றுமென கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சன்தன ஜயரட்ண தெரிவிக்கின்றார். இந்த சந்திர கிரகணம் கிழக்கு வானில் தெரியும். இது நிழல் சந்திர கிரகணம் என்பதால் சந்திரனின் ஒளிமங்கலாகத்தெரியும். இவ்வருடத்தில் மற்றுமொரு சத்திர கிரகணம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி நள்ளிரவு நிகழுமெனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

Read More

படுகாயமடைந்த மௌலவி பலி

காத்தான்குடி பிராதன வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் மௌலவி ஒருவர் பலியாகியுள்ளார். இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மிக வேகமாக ஆரையம்பதியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் பலத்த காயாங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபின்னர் மரணமானார். இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த…

Read More

அதிக வேகத்தினால் ஏற்பட்ட விணை

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி ஜூஸ்லா பாமசிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணித்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயது அபுல் ஹசன் முஹம்மட் ஒஸாமா மரணமடைந்துள்ளார்.

Read More

மின்­சாரம் தாக்கி 94 பேர் உயி­ரி­ழப்பு

மின்­சா­ரத்தின் தாக்கம் கார­ண­மாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இலங்கை பொதுப் பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் கூட்­டுத்­தா­பன தொடர்­பாடல் பிரி வின் பிரதிப் பணிப்­பாளர் வி.விம­லா­தித்தன் தெரி­வித்தார்.

Read More

மஹிந்த குழப்புகின்றார்

குழப்புகின்றார் மஹிந்த  சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் சந்திரிகா  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பிள­வுகள் இல்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் கட்­சியை குழப்­பிய அதே அணுகு­மு­றையை மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போதும் முன்னெ­டுத்து வரு­கின்றார். எக்­கா­ரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவுப­டுத்த இடமளிக்க முடியாது. நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட கூட்­டத்­திற்கு நாம் அஞ்­ச­மாட் டோம். அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை என முன்னாள் ஜனா­தி­ப­தி­ சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் மஹிந்த ராஜ­பக்…

Read More

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் : பிரதமர்

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 ஆவது தேசிய மாநாட்டிலேயே பிரதமர்  இதனைத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த பாலமுனை விளையாட்டு மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இத்தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,…

Read More

இந்திய பிரஜைகள் 12 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று   வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

சிசு மூச்சு திணறி உயிரிழப்பு – தலவாக்கலையில் சம்பவம்

தாய் ஒருவர் தனது இரண்டரை மாத ஆண் சிசுவுக்கு கொடுத்த பால் சிசுவின் மூச்சு குழாயில் சென்றுள்ளது. இதனால்  சிசு மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை சவூத் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது என தலவாக்கலை பொலிஸ் சிறுவர் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி வீ. சுந்தர் ராஜ் தெரிவித்தார். வட்டகொடை சவூத் தோட்டத்தில் வசிக்கும் சசிக்குமார் ரிதிக்சன் என்ற ஆன் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வின் தாய். வீ. முருகாந்தினி இவர் உயிரிழந்த…

Read More

24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது..!

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதை நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read More

பாரிய மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை பெறும் நடவடிக்கை 24ம் திகதியுடன் நிறைவு

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு முன்னர் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பதிவு செய்து கொள்ளுமாறு பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச கேட்டுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம்…

Read More