ஜனாதிபதி, பிரதமரை இன்று சந்திக்கிறார் செயிட் அல் ஹுசைன்
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரை இன்றைய தினம் (9) சந்திக்கவுள்ளார். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுடைய இலங்கை விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும். இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திக்கவுள்ளார்….
