Headlines

பாண்துண்டு தொண்டையில் சிக்கியதில் இளம் தாய் மரணம்

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த இளம் தாயொருவர் சாப்பிடும்போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். மிஹிந்தலை திருகோணமலை பிரதான வீதியின் மஹகனந்தராவ குளத்தினருகே இருந்த கடையொன்றில் காலை உணவாக பாணும் சம்பலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாண் துண்டொன்று தொண்டைக்குள் சிக்கியதால் அவதியுற்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட இவரது கணவர் உடன் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போதும் பாதிக்கப்பட்ட இளம் தாயை…

Read More

காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சி

– ஊடகப்பிரிவு – கைத்தொழில், வர்த்தக அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி மூலோபாய அமைச்சும் இணைந்து நடாத்திய, காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (07) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கண்காட்சியில் பங்குபற்றிய காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் இவர்களின்…

Read More

வந்தடைந்தார் செயிட் அல் ஹூசைன்

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.  நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹூசைன் எதிர்­வரும் 9 ஆம்­தி­கதி வரை நாட்டில் தங்­கி­யி­ருப்­ப­துடன் அரச தரப்பு, எதிர்த்­த­ரப்பு, சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை…

Read More

யோசிதவிற்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவி விலக முடியும்!- கிரியல்ல

யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்காக கண்ணீர் வடிக்கும் பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் என அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சில் நேற்று (6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முக்கிய பிரபு ஒருவரின் மகன் கைதானமையை தாங்கிக் கொள்ள முடியாத பிரதி அமைச்சர்கள் பதவியை இராஜினாமா செய்ய முடியும் எனவும் அதற்கு தடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்… பதவி விலகப்…

Read More

இலங்கையில் லைலா, சுருக்கு வலைகளுக்கு 21முதல் தடை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மீன்பிடியை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். “லைலா மற்றும் சுருக்கு” மீன்பிடிகளை காட்டிலும் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே இதனை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தம்மிடம்…

Read More

தமிழில் தேசியகீதம்! சிங்கள கல்விமான்கள், புத்திஜீவிகள் வரவேற்பு

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். காலத்துக்குத் தேவையான விடயமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை உண்மையான பௌத்தர் எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தொடர்பில் சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவித்தபோது; இது எப்போதோ இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதால் சிங்களவர்களுக்கு எதுவும் ஏற்படப் போவதில்லை. எதிர்க்க…

Read More

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இத்தகைய கொடுக்கல் வாங்கல்களின் போது நாணயக் கட்டுப்பாட்டு தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அந்த நிலைப்பாட்டில்…

Read More

நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை(4) மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

குர்ஆன் முழுவதும் மனனம் செய்துள்ள இங்லாந்தின் ஏழு வயது சிறுமி !

இங்லாந்தின் ஏழு வயது சிறுமி  மரியா குர்ஆன் முழுவதும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார். 7 Year Old Girl From England Memorises the Entire Qur’an Maariya from Luton, England has completed memorising the entire Qur’an. She started aged 5 when she memorised Surah Yasin in a charity challenge in order to raise money for Syria. Shortly after, she completed…

Read More

வடமாகாண ஆளுநராக, றெஜினோல்ட் குரே

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், புதிய வடமாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…

Read More

பாரிய வாகன நெரிசல் : பல்கலைக்கழக திறக்குமாறு ஆர்ப்பாட்டம்

திறந்த பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நகர மண்டப சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகில் 11 மணிக்கு ஆரம்பமாகியது. கடந்த 22ஆம் திகதி, பல்கலைக்கழக மாணவர்களின் உடமைகள் சிலவற்றை நீக்குவதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சி செய்ததையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலையை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More