Headlines

ஒபாமாவின் செல்ல நாயை கடத்த திட்டமிட்டவர் கைது

தன்னை இயேசு கிறிஸ்து என கூறிக்­கொண்ட ஒருவர் ஒபா­மாவின் நாய்­களில் ஒன்றைக் கடத்திச் செல்ல முயற்­சித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு பின்னர் விடுக்­கப்­பட்­டுள்ளார். 49 வயது  ஸ்கொட் ஸ்டோக்கட் என்­ப­வரே வொஷிங்டன் ஹோட்­டலில் இரக­சிய பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டார். அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவின் செல்ல நாய்­களில் ஒன்­றான போவை ஸ்கொட் கடத்­து­வ­தற்­கான திட்டம் குறித்து இர­க­சிய தகவல் மூலம் தெரிய வந்ததாக பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அந்த நபரின் வாக­னத்தில் சில ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள்…

Read More

மாவோ சேதுங்கின் 120 அடி உயரமான சிலை தகர்க்கப்பட்டது

சீனாவில் அண்மையில் திறக்கப்பட்ட மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்து 1976 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்த மாவோ சேதுங்கின் பிரமாண்ட சிலை, ஹெனான் மாகாணத்தின் ஸுஷிகாங் நகரில் கடந்த  மாதம் திறந்துவைக்கப்பட்டது.   120 அடி (36.6 மீற்றர்) உயரமுடையதாக இச்சிலை அமைந்திருந்தது. 9 மாத காலமாக இச்சிலையின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.   சுமார்…

Read More

போதையில் வாகனம் செலுத்திய புதுமைப் பெண்கள்

மது போதையில் மோட்டார் சைக்கிளை வீதி முழுவதும் அங்கும் இங்குமாக செலுத்தி வந்த இரு இளம் பெண்கள் களுத்துறை, வடியமண்கட சந்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமண நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு அங்கு மது அருந்திவிட்டு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்தப் பெண்கள் பாணந்துறையிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் எனவும் வாதுவை நகரில் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெண், கடும் போதையில் நிற்க முடியாது…

Read More

2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும்

பூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற கிரகங்களில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஏற்கனவே, சந்திரனுக்கு மனிதர்கள் சென்று கால் பதித்து விட்டனர். அதன் அடிப்படையில் அங்கு புதிய கிராமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி சந்திரன் 2020–2030 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. அதில் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய…

Read More

மூத்த ஊடகவியலாளர் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார்!

‘சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) நேற்று (10) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார். கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில்…

Read More

டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதில் அநேகமான நோயாளர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களுக்குள் வட பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…

Read More

பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது!

புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் இலங்­கையில் பௌத்த தர்­மத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முத­லி­டமோ ஒற்­றை­யாட்­சிக்கோ எது­வி­த­மான பாதிப்பும் ஏற்­ப­டாது. இலங்கை வர­லாற்­றில சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்ள முத­லா­வது புதிய அர­சி­ய­ல­மைப்­பாக இது அமையும் என்று அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே.கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சபை முதல்­வரும் நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர் கல்வி அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்; அர­சாங்கம் தற்­போது புதிய அர­சி­ய­ல…

Read More

முஸ்லிம்களை புறக்கணித்தால் நெருக்கடி ஏற்படும்: சம்பிக்க

அனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிக்கும் வகையில் இனியும் செயற்­பட முடி­யாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். இன­வாத அடிப்­ப­டையில் தொடர்ந்தும் செயற்­பட்டால் மீண்டும் நாட்டில் உரி­மைக்­கான போராட்டம் ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான யோச­னை­களை ஜாதிக ஹெல உறு­மய கட்சி முன்­வைக்கும் என வின­வி­ய­போதே அவர் மேற்­ கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், கடந்த…

Read More

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்

wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம்…

Read More

வித்தியாவின் படுகொலை: இன்று விசாரணை!

பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மே மாதம் குறித்த மாணவி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் முதலில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் ஆரம்ப பகுதியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவ் வழக்கு…

Read More

தாக்கப்பட்ட நவமணி பத்திரிகை அலுவலகம்!

களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று முன்தினம்  (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது  இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மர்மநபர் சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்துள்ளதாகவும் பூட்டின் உறுதித்தன்மை காரணமாக முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மர்மநபர் முகத்தை மூடிக்கொண்டு சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துள்ளதால் குறித்த நபரை அடையாளம் காணமுடியவில்லை. இதனை…

Read More

அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும்  ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல சேனா அமைப்பும்  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தாம் ஒரு  பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு  அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கடந்த…

Read More