Headlines

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஞானசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் இவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

24 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்படடுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

தனியார் வங்கியில் கொள்ளை : தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ளை நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கைக்குண்டை காட்டி ஊழியர்களை மிரட்டி 8 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் வங்கி ஊழியர் ஒருவரையும் கடத்தி கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதுடன் பின்னர் குறித்த ஊழியர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

குழப்பத்தின் உச்சத்தில் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிகொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதுவரையில்…

Read More

துமிந்த சில்வா பெண் ஒருவரை தாக்கினார்! நீதிமன்றத்தில் விசேட அதிரடிப்படைவீரர் சாட்சியம்

தேர்தல் தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு வந்து அங்கு வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவரை தாக்கினார் என்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பமாகின. இதன்போது விசேட அதிரடிப்படையை சேர்ந்த தமித் சுரங்க என்பவர் சாட்சியமளித்தார். இவரே பாரத லக்ஸ்மன் உட்பட்ட நான்குபேர், கொலை தொடர்பான வழக்கின் முதலாவது சாட்சியாவார். இந்தநிலையில் நேற்று அவர்…

Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்: ஜே.வி.பி.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டும். மக்களின் நிறுவனங்கள் தொடர்ந்தும் ஆணையாளர்களின் நிர்வாகத்தில் நடாத்துவது பிழையானது. எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் நடாத்துவதனை காலம் தாழ்த்தக்கூடாது. எல்லை நிர்ணயம் குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையை ஜே.வி.பி நிராகரிக்கின்றது. எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கையானது குழப்பங்கள் நிறைந்தது. அரசியல் தேவைகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புதிதாக…

Read More

போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியவில்லை!– ஞானசார தேரர்

போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று பரீட்சார்த்த அடிப்படையில் புதிய போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு ஐந்து நிமிடங்கள் காலதாமதமானது. நீதிமன்றில் முன்னிலையாவதனை தவிர்க்கவோ அல்லது ஒழிந்து திரியவோ எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது. இராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து திட்டம் காரணமாக முன்னொரு போதும் இல்லாத…

Read More

அவன்ட் கார்ட் பற்றிய உண்மைகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை!– அனுரகுமார

அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றிய உண்மைகளை சில ஊடகங்கள் வெளியிடுவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அவன்ட் கார்ட் பற்றி நான் வெளியிடும் உண்மைகளை சில ஊடகங்களும் இணைய ஊடகங்களும் வெளியிடுவதில்லை. அவன்ட் கார்ட் நிறுவனம் சில ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் பணம் வழங்கியுள்ளது. நிறுவனம் பற்றி நான் வெளியிட்ட கருத்து சில பிரதான ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டதுடன், சில ஊடகங்களில் மிகச் சிறிய செய்தியாகவேனும் வெளியாகவில்லை. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்க…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றே தீருவோம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறப்போவதாகவும் மஹிந்த அணியினர் சூளுரைத்துள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக பாரிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில்…

Read More

சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடைப் பெண்­களின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தக பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குற்றச் செய­லொன்­றுடன் தொடர்­பு­பட்­டது அல்ல என பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது. சீருடை மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­ன மாண­வியின் பாட்­டி­யினால் மாண­வியின் வீட்டில் ஒப்­ப­டைக்­கு­மாறு கொடுத்து அனுப்­ பப்பட்­டது என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன தைத் தொடர்ந்து கைதான 23 வய­து­டைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப்…

Read More

சிரியாவில் அமெரிக்க நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது – ஒபாமா

சிரியா உள்நாட்டு யுத்தத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சி படைகள் கடந்த 4 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போது, ஐ.எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருவதால் உள்நாட்டு யுத்தம் வலுவடைந்துள்ளது. இந்த யுத்தத்தை தடுப்பதற்காகவும், ஐ.எஸ் வாதிகளை முறியடிப்பதற்காகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், நேற்று அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு…

Read More

அப்பட்டமான மனித உரிமை மீறல்

உத்தர பிரதேசம் மாநிலம் தாத்ரியில் பசு இறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சியை கொன்று சாப்பிட்டதாக வதந்தியால் முகமது அக்லாக் என்பவர் கொல்லப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மற்றும் நீதிபதி ஜோசப் “தாத்ரி படுகொலை அப்பட்டமான மனித உரிமை மீறல். ஏற்கனவே இந்த பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம்…

Read More