Headlines

சுத்தமான குடிநீரை கோரி ஆர்ப்பாட்டம், பொலிஸார் தடியடி பிரயோகம்

திஸ்ஸ – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் பல்லேமல சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். பந்தகிரிய பிரதேசவாசிகளே ஆர்ப்பாட்ட த்தை மேற்கொண்டுள்ளனர். சுத்தமான குடிநீரை கோரி இவர்கள் ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுத்துள்ளனர்.

Read More

பத்தரமுல்லையில் சடலம் மீட்பு

பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ.எல்.எஸ்.மாவத்தையல இன்று பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில்  குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏ.எல்.எஸ்.மாவத்தையில் 58ஆம் இலக்க வீட்டின் அருமையிலுள்ள வெற்று வளவு ஒன்றை கூட்டி துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குப்பைக்குள்ளிருந்த குண்டே வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 2 பிள்ளைளின் தந்தையான எச்.எம். இர்சாத் என்ற 32 வயது குடும்பஸ்தரே படுகாயமடைந்தவராவார். சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

புதிய போக்குவரத்து ஒழுங்கு : கடும் வாகன நெரிசல்

கொழும்பின் சில வீதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு முறைகள் காரணமாக பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய பத்தரமுல்லை, பாராளுமன்ற சுற்றுவட்டம், வெலிக்கடை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஏறாவூர் பிரதேசத்தில் 1 கோடி ரூபா பெறுமதியான மீன்கள் சிக்கின!

ஏறாவூர் பிரதேச சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரைவலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது  கரைவலைகளிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்தமை…

Read More

வெளிநாட்டு வங்கி கணக்குகளை கூறி தங்களை அவமதிக்க முயற்சி!- நாமல்

வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக கூறி தன்னையும் தனது குடும்பத்தையும் அவமதிப்பதற்கு முயற்சியொன்றியை குறிப்பிட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் மகனால் டுபாயில் வங்கி கண்க்கில் வைப்பு செய்யப்பட்ட 650 அமெரிக்க டொலர் கணக்கினை தடை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் செயற்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமையவே டுபாய் நீதிமன்றம் இந் நடவடிக்கையை மேற்கொள்கின்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கிடையில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக…

Read More

பிரதமராகும் கனவில் விமல் வீரவன்ச குழப்பங்களை விளைவிக்கின்றார்: அஜித் பெரேரா

பிரதமராகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குழப்பங்களை விளைவித்து வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச எல்லாக் காலங்களிலும் யாருடைய தோளிலேனும் ஏறியே அரசியல் செய்து வருகின்றார். பிரதமராகும் கனவு அவருக்கும் இருக்கும். அதற்கு தேவையான முயற்சிகளில் ஒன்றாகவே தற்போது நாடாளுமன்றில் குழப்பங்களை விளைவித்து வருவதனை கருத வேண்டும். ஜே.வி.பியில் இருந்த காலத்தில் ஜே.வி.பி லேபளில் பிரபல்யம் அடைந்து பின்னர் கட்சியை காலல் உதைத்து…

Read More

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் 1929 தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை மாத்­திரம் 1929 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு முறை­யி­டு­மாறு சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த சில நாட்­க­ளாக குறித்த 1929 தெலை­பேசி இலக்­கத்தின் ஊடாக அநா­வ­சி­ய­மற்ற முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெறு­வ­தாக அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை குறித்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு 1290 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவற்றில் 1202 முறை ப்­பா­டுகள் தேவை­யற்­றவை என்றும் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. அவற்றில் சிறு­வர்­களை பாட­சா­லைக்கு சேர்ப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள், சர்­வ­தேச பாட­சா­லை­களின் கட்­டணப்…

Read More

டெங்கு காய்ச்சல்; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

டெங்கு நுளம்புகள் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சல் குறித்து பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மென சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது. சுகா­தார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரி­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது. மழைக்கு பிந்­திய காலம் என்­பதால், டெங்கு நோய் தற்­போது வேக­மாக பரவ ஆரம்­பித்­துள்­ள­மை­யினால் பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். குறிப்­பாக மேல் மாகா­ணத்தின் கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இந்த நோய்…

Read More

வத்தளையில் நாளை 24 மணித்தியாலம் நீர்வெட்டு

வத்தளையில் நாளை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Read More

ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகாத பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Read More

உள்ளத்தை பிளக்க வைக்கும் காட்சி! (வீடியோ)

கிழக்கு காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஐந்து மாத பலஸ்தீன கர்ப்பிணி பெண் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் முற்றுகை நிலத்தில் 30 வயது நூர் ஹஸன் என்பவரும் அவரது மகளான ‘ஹ்தும் அவர் களது வீடு தகர்க்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறித்த பெண்ணின் குடும்பத்தினர் மூவர் காயமடைந்திருப்பதோடு இடிந்த கட்டடத்தில் மீட்பாளர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று காசா எல்லையில் இடம்பெற்ற…

Read More