Headlines

அப்துல் கலாம் இன்று பிரதமர் ரணிலுடன் மதிய போஷனம்

இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மட்டுமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று மதிய போஷன விருந்தளிக்கிறார். அப்துல் கலாம், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அழைப்பையேற்று மூன்றுநாள் விஜயமாக நேற்றிரவு இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மைத்திரி – அப்துல்கலாம் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று ஜனாதிபதி செயலகத்தில்  வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். சம்பிக்க ரணவக்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

சீரழியும் முஸ்லிம் யுவதிகள்

அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்களின் மத்தியிலேயே அதிகரித்த சதவீதத்தில் காணப்படுகிறன. இதன் பின்னணி என்ன? இதை சமூக அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினரை இலக்கு வைத்து ஊக்கப் படுத்தப்படும் நடவடிக்கையென பொதுவாக கூறுவிட்டு இருக்க முடியாது. வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஹசன் புஹாரி என்ற அன்பர் ஒரு சிறிய சம்பவத்தை எமக்கு அனுப்பியுள்ளார். குறைந்தபட்சம் பெற்றோராவது தமது பிள்ளைகளில் கவனம் செலுத்த இந்த சம்பவங்கள் பகிரப்பட வேண்டுமென…

Read More

யார் இந்த முஹம்மது (ஸல்) ? ஒரு மாற்று மத சகோதரியின் பதிவு

இந்து மற்றும் பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முஹம்மது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான , சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் . பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் , வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற…

Read More

கரு போட்டியிடமாட்டார்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாக அறிவித்துள்ளார்.

Read More

மஹிந்த தேசப்பிரிய ஓய்வு!

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது கடமையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Read More

ஐரோப்பாவில் இஸ்லாமிய எழுட்சியை யாராலும் தடுத்து விடமுடியாது

கடந்த புதன் அன்று இஸ்லாமும் ஐரோப்பாவும் என்ற தலைப்பில் புரோக்ஸலில் ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் ஐரோப்பாவின் பல முக்கிய அரசியல்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பாவிலுள்ள பல இஸ்லாமிய அமைப்புகளின், தலைவர்கள் மற்றும்  இமாம்கள் உட்பட பெரும் திராளானவர்கள் கலந்து கொண்டனர். அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோர்கிரீனி அவர்களின் பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது. அவர் தமது உரையில் “தற்போதைய சூழலில் ஐரோப்பாவின் மிக…

Read More

ஊழலில்லா மாநிலமாக டெல்லியை மாற்ற பட்ஜெட்!

ஊழல் இல்லாத முதல் மாநிலமாக டெல்லியை மாற்ற அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசொரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆம் ஆத்மி டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு முறையும், டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று தேர்தல் வாக்குறிதியை அளித்தே தேர்தலில் வெற்றிப் பெற்றது. அதன் படி சில அரசு அதிகாரிகளின் பதவிகூட ஊழல் குற்றச்சாட்டால் பறிபோனது. ஊழல் குறித்த புகார் தெரிவிக்க தனி தொலைப்பேசிப் புகார் எண்கள் மக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது….

Read More

20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக முஸ்லிம்கள்!

லண்டன் வீதிகளில் நோன்பு திறந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்கள் சகோதரர்கள். இந்நிகழ்வில் அந்நிய மதத்தவர்கள் கலந்துகொண்டுள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதை பார்த்துக் கொண்டு எனையவர்கள் வீதியில் செல்வதை படத்தில் காணலாம் மஸ்ஜித்களில்  இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் தெருக்களில் முஸ்லிம்கள் வீதிகளில் நோன்பு திறக்கின்றனர். இன்னும், 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக முஸ்லிம்கள் மாறி விடுவர் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Read More

ரியாத் வாழ் சகோதரர்களுக்கு இலவச உம்ரா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… ரியாத் வாழ் சொந்தங்களுக்கு! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02/07/2015 வியாழக்கிழமை உம்ரா பயணம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த இருக்கைகளே உள்ளன.  புனித உம்ரா பயணம் வரவிரும்பும் சகோதரர்கள் பதிவு செய்து கொள்ளவும். நிபந்தனைகள்: 1) முன்பு உம்ரா செய்யாத புதிய சகோதரர்களுக்கு முன்னுரிமை 2) குறைவான சம்பளத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு: கேப்டன். அமீர் அப்பாஸ். 0543507743. தகவல்  :Hussain Ghani.

Read More

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி துவக்கம்!

துபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 19 ஆம் ஆண்டாக நேற்று இரவுத் தொழுகை ( தராவிஹ் ) முடிந்தவுடன் அமீரக நேரப்படி 10.30 மணிக்கு துவங்கியது. இதில் ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், ஜோர்டான், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 80 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்பின் கீழ்…

Read More

ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் – சரத் பொன்சேகா

எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக இந்த நிகழ்வு இடம்பெற்றது. 10 அமைப்பாளர்கள் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.

Read More