Headlines

சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்க வர்த்தகக் குழு சீனா பயணம்!

சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக உத்தியோக பூர்வ வர்த்தக குழுவொன்று (23-06-2015) சீனா பயணமாகி உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் தெரிவித்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் இலங்கையின் மிளகு மற்றும் வாசனைத்திரவியங்கள் ஏற்றுமதியாளர்கள் பங்குபற்றுவதாகவும் மரைக்கார் தெரிவித்தார். சீனாவில் நடைபெறும் வாசனைத்திரவியங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றவதற்காக உயர்மட்ட வாசனைத்திரவிய ஏற்றுமதியாளர்கள் குழுவொன்று மாறுபட்ட சந்தை வாய்ப்புக்களை பற்றி கண்டறிவதற்காகவூம் தெற்கிழக்காசிய…

Read More

நூடில்ஸ் விளம்பரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

நூடில்ஸ் வகைகளுக்கான விளம்பரங்கள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நூடில்ஸ் விளம்பரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. . நுகர்வோரின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு நுகர்வோர் அதிகாரசபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. நூடில்ஸ் வகைகளில் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேர்தல் முறை மாற்றம்; சிறுபான்மையை  பாதிக்கக் கூடாது! சோபித்த தேரர் அதிரடி

உத்தேச தேர்தல் சீர்திருத்தம்  அடங்கிய இருபதாம் சீர்திருத்தினால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள் பாதித்து விடக்கூடாது எனவும் அதனை நிறைவேற்றுவதில் அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை  என்றால்   பாராளுமன்றத்தினை இன்றோ அல்லது ஒருவராரத்திலோ கலைத்துவிட்டு பொது தேர்தலுக்கு செல்லுமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துவெளியிட்ட அவர் எதிர்வரும் பொது தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக  தேர்தல் சீர்திருத்தை நிறைவேற்றுவதை பிரதான கட்சிகள் முன்னிறுத்தி  சிறுகட்சிகள் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாத வகையில் நிறைவேற்ற வேண்டும்…

Read More

510 பயணிகளுடன் இலங்கையில் அவசரமாக இறங்கிய எமிரேட்ஸ்

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கி 510 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் வகை விமானமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ பயணிகளை ஏனைய விமானங்களில் டுபாய்க்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

வடக்கிலும், கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்கள் – அமைச்சர் றிஷாத்

வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக கூறினார். அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும்,இலங்கைக்கான அமெரிக்க பதில் துதுவர் அன்று சீமானுக்கும் இடையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இடம் பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார் மேலும் இந்த சந்திப்பின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில் – அதே வேளை இலங்கையின் நுகர்வு பொருட்களை அமெரிக்க கொள்வனவு…

Read More

பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது. பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்கு தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை திரட்­டிக் ­கொள்ள வேண்டும் என கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்க தெரி­வித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது, எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ஸவை…

Read More

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பலஸ்தீன் வழக்கு

-இப்னு ஜமால்தீன்- 2014ம் ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீன் – காஸா மீது மேற்கொண்ட போரில் பலஸ்தீன் மக்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்டதுடன்,  சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் மற்றும் குண்டுகளையும் பயன்படுத்தி யுத்தக்குற்றங்களை புரிந்தது. இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை விசாரணை செய்யுமாறு பலஸ்தீன் அரசு சர்வேதச குற்றவியல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கள் ஒன்றை செய்துள்ளது. யுத்தக்குற்றங்கள் உள்ளிட்ட இரு பயில்கள் அடங்கிய ஆவனங்களை கையளித்த பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் ரியாழ் அல்மாலிகி…

Read More

நட்பு நாடுகளை வேவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது – ஒபாமா

பிரெஞ்சு நாட்டின் அதிபர்களை அமெரிக்கா வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபருடன் போனில் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அந்த உரையாடலின்போது கடந்த காலத்தில் நட்பு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உடனடியாக நிறுத்தப்படும் என அவர் கூறியதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரெஞ்சு நாட்டின் அதிபர்களான ஜாக்குவெஸ் சிராக், நிக்கோலஸ் சர்கோசி மற்றும் பிராங்கோய்ஸ் ஹாலண்டே ஆகியோரை அமெரிக்கா வேவு பார்த்ததை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று அம்பலப்படுத்தியது….

Read More

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை…

Read More

பாஸ்டனில் வெடிகுண்டு; வாலிபருக்கு அதிகாரபூர்வமாக மரண தண்டனை விதித்து தீர்ப்பு

அமெரிக்காவில் பாஸ்டன் நகரை சேர்ந்தவர் ஷோகார் சர்னேவ் (21). கடந்த 2013–ம் ஆண்டில் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 260 பேர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து ஷோகார் சர்னேவ் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஷோகார் சர்னேவுக்கு 12 பேர் அடங்கிய மக்கள் நீதிபதிகள் குழு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது….

Read More

புதிய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை – மத்திய வங்கி

திய அரசால் அச்சிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் செல்லுபடியானவை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிய அரசு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி புதிய ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநரது நியமனம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நாணயத்தாளின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன், ஐயாயிரம் ரூபா நாணயத்தாளில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளதாகவும்,அவர் சிங்கப்பூர் பிரஜை எனவும் இதனால் இந்த நாணயத் தாள் செல்லுபடியாகாது எனவும் முன்னாள்…

Read More