Headlines

தென்­னா­பி­ரிக்கா பய­ண­மானார் சந்­தி­ரிகா

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ளார். “ஐக்­கிய நாடுகள் அமை­தியை கட்­டி­யெ­ழுப்பும் நிதியின் பொறுப்­புக்­கூறல்” என்ற தொனிப்­பொ­ருளில் தென்­னா­பி­ரிக்­காவில் நடை­பெ­றவுள்ள கருத்­த­ரங்கு ஒன்றில் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க உரை­யாற்­ற­வுள்ளார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இலங்­கையின் சமா­தானம் நல்­லி­ணக்கம் மற்றும் நம்­பிக்­கை­யெ­ழுப்­பு­தலில் பெற்­றுள்ள அனு­ப­வங்கள் என்ற தலைப்பில் உரை­யாற்­ற­வுள்ளார். இதே­வேளை இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு தொடர்பில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தென்­னா­பி­ரிக்க அர­சாங்­கத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இலங்­கையில் எவ்­வாறு இந்த உண்­மையை கண்­ட­றியும்…

Read More

ஐ.எஸ். தாக்குதல்கள் விரைவில் இலங்கையில்  இடம்பெறலாம் BBS

– க.கமலநாதன் – தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார். மதத்தீவிரவாத கற்கை நெறிகள் முஸ்லிம் மக்களுக்கு போதிக்கப்பட்டு அவர்களை தீவிரவாதிகளாக்குவதன் பின் விளைவுகளை முஸ்லிம் சமூகம் விரைவில் எதிர்கொள்ள நேரிடும் எனவும் குர்ஆனில் உள்ள இஸ்லாம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகள் தற்போதைய நடைமுறைக்கு சாத்தியமற்றது…

Read More

வெள்ள பாதிப்பு: அமைச்சர் றிஷாத் அதிகாரிகளுக்கு உத்தரவு

வவுனியா மாவட்டத்தில், வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தங்குதடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று முன்தினம் (16) கைத்தொழில், வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில், அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற, வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலை தொடர்பான கலந்துரையாடலின்போதே…

Read More

36 இலங்கை மீனவர்கள் விடுதலை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 36 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்!

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக சாலை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் தொடக்கம் இந்த வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் சாலை…

Read More

மத்தல விமானநிலையத்தில் ஒருவர் கைது

– K.Kapila – இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கோடியே 60 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்

ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர் ஜெர்மனி நாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் நாடு திரும்பியும், வெளியே வரவில்லை. இது பல்வேறு யூகங்களை கிளப்பியது. ஆனால், அவர் முழுமையான நலம் பெற்று விட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர்…

Read More

மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன. 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உள்ளுர் மரக்கறிகள் 600 முதல் 700 வரை விற்பனையாகிறது. தம்புள்ள மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை…

Read More

12 மணி நேர நீர்வெட்டு

– எம்.ஆர்.எம்.வஸீம் – அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்கை கார­ண­மாக நாளை 17ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரை­யான 12மணி நேர நீர் விநி­யோகம் தடைப்­படும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை அறி­வித்­துள்­ளது. மொரட்­டுவை மாந­கர சபை பிர­தேசம்,இரத்­ம­லானை,சொய்­சா­புர,பாணந்­துறை, நல்­லூ­ருவ, கிரி­பே­ரிய, கெஸல்­வத்தை,ரை­கம,பண்­டா­ர­கம,வெல்­மில்ல,குபுக, ஹொரணை மற்றும் மொரன்­து­டுவ ஆகிய பிர­தே­சங்­களும் பிலி­யந்­தலை கெஸ்­பேவ நகர சபை பிர­தேசம், பொல்­கஸ்­ஓ­விட்ட,சிய­ப­லா­கொட,வேதர, றிலா­வல,அம்­ப­லன்­கொட,ஹெர­லி­யா­வல,பால­கம,திய­கட மற்றும் ததாயன்ன ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

Read More

சேயா செதவ்மி படுகொலை: சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை   எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

ஜனா­தி­ப­தியின் பதில் இன்று

தமிழ் அர­சியல் கைதிகள் விட­யத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்றைய தினம் தனது பதிலை வழங்­க­வுள்ள நிலையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி கள் மற்றும் அவர்­களின் உற­வி­னர்கள் பலத்த எதிர்­பார்ப்­பு­டனும் நம்­பிக்­கை­யு­ட­னு­ம் இருக்கின்றனர். நீண்­ட­கா­ல­மாக நாடளா­விய ரீதியில் உள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் வலி­யு­றுத்தி வந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர். ஐந்து தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய வாக்­கு­று­திக்கு அமை­வாக எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக்…

Read More

பரபரப்பான சூழ்நிலையில் ஒபாமா – புதின் திடீர் சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புதினும் திடிரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள்…

Read More