Headlines

பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்தார் ஓமன் மன்னர்




ஓமன் மன்னர் கபூஸ் (வயது 74). 1970-ம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள மன்னர் கபூஸ், உடல் நலக்குறைவு காரணமாக நீண்டகாலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 8 மாதங்கள் அவர் ஜெர்மனி நாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் நாடு திரும்பியும், வெளியே வரவில்லை.

இது பல்வேறு யூகங்களை கிளப்பியது. ஆனால், அவர் முழுமையான நலம் பெற்று விட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு வந்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வாக அமைந்தது. பாராளுமன்றத்தில் அவர் 3 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *