Headlines

கொழும்பு துறைமுகத்தில் மிதக்கும் நூலகம்!

எட்டு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு புத்தகங்களை கொண்ட மிதக்கும் உலக புத்தக கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது. இக்கப்பலில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விடயங்களைக் கொண்ட பல தரப்பட்ட புத்தக கண்காட்சியும் இடம்பெறுவதாக இக்கப்பலின் தொண்டர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை அதிகாரியான எப். வின்ஸ்டன் தெரிவித்தார். அவர் மிதக்கும் புத்தகக் கப்பல் பற்றிய தகவல்களை மேலும் தெரிவிக்கையில் இலங்கைக்கு மீண்டும் வருகை தந்துள்ள லோகோஸ் ஹோப் கப்பலின் மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பயன்…

Read More

கொஸ்லாந்தையில் மண்சரிவு இடம்பெற்று ஓராண்டு!

மலையக மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பேரிடியாக நிகழ்ந்த சம்பவம்தான் கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம். கடந்த வருடம்  பண்டாரவளை – கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போனது யாவரும் அறிந்ததே! ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடம் இதேநாள் காலை வேளையில் ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தால் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதேவேளை, அவர்களில் பலரின் சடலங்களையேனும் மீட்கமுடியாத அவலநிலை  ஏற்பட்டது. அத்துடன் சுமார் 10…

Read More

ஆணைக்குழு முன் மஹிந்த இன்றும் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார். கடந்த தேர்தல் காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளின் போது அரச தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி குறித்த ஆணைக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(NF)

Read More

தேங்கிக் கிடக்கும் 6700 முறைப்பாடுகள்

இலஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் லஞ்ச, ஊழல்கள் தொடர்பான 6700 முறைப்பாடுகள் தேங்கிக் கிடப்பதாக அறியக்கிடைத்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், இத்தகவல்களை நேற்றைய செய்தியாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டுள்ளார். இவற்றில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த சில மாதங்களுக்குள் கிடைக்கப்பெற்றனவாகும். தற்போதைய நிலையில் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் கீழ் 170க்கும் மேற்பட்ட பொலிசாரும், நான்கு விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும், ஆணைக்குழுவின்…

Read More

நிலத்தடி மாளிகையை எட்டிப் பார்ப்பதைக் கூட மஹிந்த விரும்பவில்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள நிலத்தடி மாளிகையில் ஒருபோதும் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெறவில்லை என்று பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை தொடர்பான தகவல்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குறித்த மாளிகை ஒரு வசிப்பிடம்…

Read More

பாலியல் தொழிலில் ஈடுபட்டால்: கைதுசெய்வோம்

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டத்திற்கு முரணானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாழ்வாதாரம் கிடையாது என்பதனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் கூறி அண்மையில் சில பெண்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர். எனினும் இலங்கையின் சட்டங்களின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது. பாலியல் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் பாலியல் தொழில் மையங்களை நடாத்துதல் சட்டத்திற்கு விரோதமானது. எனவே, பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். வாழ வழியில்லை இதனால்…

Read More

மஹிந்தவின் மேலுமொரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி தெனியாய, நாதகல தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை…

Read More

ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர மாநாடு

இலங்கையில் ஜப்பானிய முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற வகையில் இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஏற்பாட்டில் ஜப்பானியத் தலைநகர் டோக்கியோவில் முதலீட்டாளர் ஊக்குவிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு ஜப்பானிய அரச அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகள் அனுசரணை வழங்கியிருந்தமை…

Read More

இஸ்ரேல் 16 ஜனாஸாக்களை வழங்காமல் சீரழிக்கிறது

இஸ்ரேல் படையினர் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்த முயன்ற பொய் குற்றச்சாட்டில்கடந்த செவ்வாயன்று மேலும் மூன்று பலஸ்தீனர்கள் சுட் டுக் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் சடலங்களை அராஜக இஸ்ரேல் நிர்வாகம் தர மறுப்பதற்கு எதிராக ஹெப்ரூன் நகரில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் படையினருடன் மோதல் ஏற்றபட்டது. இதில் பலஸ்தீனர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் ஹெப்ரூன் நகரின் டெல்ருமைதா பகுதியில் இஸ்ரேல் படையினரின் மீது கத்திக்குத்து தாக்கு தல் நடத்த முயன்றதாக ஒரு…

Read More

வடக்கு முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் – அநுரகுமார

-அஸ்ரப் ஏ சமத்- பேராதனை பல்கலைக்கழக புவியல் துறை பேராசிரியா்  சாஹூல் எச். ஹஸ்புல்லா ஆங்கில மொழி முலம் எழுதிய மீள திரும்புவதற்கு   மறுக்கப்படும் உரிமைகளும்  சவால்களும் என்ற தலைப்பில் நுால் ஒன்று (28) கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது, நுாலின் முதற் பிரதியை இவ் வைபத்திற்கு  பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜே.வி. பி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பிணா் அநுர குமார திசாநாயக்க முசலி முன்னாள் பிரதேச சபைத் தலைவா் எஹியாவிடம்…

Read More

ஆசியா கண்டத்தின், அக்னி பிரவேசம்

(India) பீகாரில் அரசியல் கட்சிகளை அலற வைத்த அசத்துத்தின் உவைஸி…..!! ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேசம் என்றழைக்கப்படும் மஜ்லீஸ் கட்சி தலைவர் பீகாரில் சூறாவளி சுற்றுப்பிரச்சாரம் செய்து வருகிறார். மராத்திய மண்ணில் பிஜேபிக்கும், சிவசேனாவுக்கும் பீதியை கொடுத்த உவைஸி பீகாரிலும் பீதியை கொடுத்துள்ளார். அசத்துத்தின் உவைஸி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டு வருகிறது. மஜ்லீஸ் கட்சிக்கு வெற்றியோ தோல்வியோ அதுமுக்கியமல்ல, பீகாரில் பிஜேபி ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக…

Read More

வளைகுடா நாடுகளில் மேலும் வெப்பநிலை உயரும்

வளைகுடா நாடுகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது ஒரு அமெரிக்க ஆய்வு. உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது. மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை…

Read More