Headlines

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், ஊழல் ஒழிப்பிலும் இலங்கை முன்னேறியுள்ளது – அமெரிக்கா

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்ற அவர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரவீர உள்ளிட்ட உயரதிகாரிகளை இன்று காலை சந்தித்து பேசினார். அதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கை மக்களிடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார். மேலும், இலங்கையில்…

Read More

ஞானசாரதோற்கடிக்கப்பட்டது ஜனநாயகத்தின் சிறந்த வெளிப்பாடு – வாசுதேவ

இராணுவ ரீதியான சிந்தனைகளைக்கொண்ட சரத் பொன்சேகாவும், இனவாத சிந்தனை கொண்ட ஞானசார தேரரும் தோற்கடிக்கப்பட்டுள்ளமையானது சிறந்த ஜனநாயகத்தின் வெளிப்பாடாகும் என்று வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், புதிய இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக்கட்சி எடுத்த முடிவு தவறானது. சுதந்திரக் கட்சிகக்கு வாக்களித்த மக்களின் மனோநிலை மற்றும்…

Read More

‘500 மில்லியன் ரூபா, நஷ்டஈடு வேண்டும்’

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிராக மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில திருமணம் முடிப்பதாக ஏமாற்றி ஒரு யுவதியை சீரழித்திருப்பதாகவும், இரும்பு விற்பனை தொடர்பான முறைகேடு ஒன்றில் தொடர்பு இருப்பதாகவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றம் சாட்டியிருந்தார். இது பொய்யான குற்றச்சாட்டு என்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்த கம்மன்பில,…

Read More

ஹஜ் யாத்திரை செல்வோரிடம், அன்பான வேண்டுகோள்..!

بسم الله الرحمن الرحيم – அ.மு.முஹ்ஸின் – புனித ஹஜ் பயணம் செல்ல நாடியுள்ளவர்கள் தயவு செய்து தங்களது பயணத்தை வீட்டிலிருந்து ஆரம்பிக்க முன் ஹஜ்ஜை பரிபூரணமாக நிறைவேற்ற அவசியமான அனைத்து விடயங்களையும் , தங்களுக்கு (மார்க்க அறிவிலும், பேணுதலிலும்) மிகவும் நம்பிக்கையான ஒரு ஆலிமை அனுகி , அவருக்கு தங்கள் சக்திக்குற்பட்ட அன்பளிப்பை வழங்கி கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உங்களது பெபெறுமதியான நேரங்களையும் ,பணத்தையும் செலவு செய்து  பல சசிரமங்களை சகித்து இப்புனித…

Read More

ரணில் விக்ரமசிங்க, பழிவாங்க மாட்டார் – மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது எனவும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் எனவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தினசரி பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குமார் வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என…

Read More

அந்தத் தகவல் தவறு! மறுக்கும் இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வௌியான தகவல் தவறு என, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களை இலக்கு வைத்து எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன. இதன்படி எல்லை தாண்டியதாக கூறப்படும் 12 மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இவர்கள் பயணித்த படகுகளும் கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள்…

Read More

பா.உ.க்கள் பொறுப்பேற்ற பின்னே மாகாண சபை வெற்றிடங்கள் பற்றி அவதானம்

நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு சில மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். இந்தநிலையில் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, மாகாண சபையில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனத் தெரிகிறது. இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான மாகாண சபை உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன்படி அதிக தொகையினர் மேல் மாகாணத்தில் இருந்தே (13 பேர்) இவ்வாறு தெரிவாகியுள்ளனர். மேலும் சப்ரகமுவ மாகாணத்தில்…

Read More

கொக்கோ-கோலாவின் அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தம்

இலங்கையில் தயாரிக்கப்படும் கொக்கோ – கோலா  நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார்.  கொக்கோ – கோலா நிறுவனம் தனது உற்பத்திக்கான நீரை களனி கங்கையில் இருந்தே பெறுகின்றது. இந்நிலையில் களனி கங்கையில் எண்ணெய் கலந்திருப்பது அண்மைய ஆய்வுகளில் தெரியவந்ததையடுத்தே குறித்த நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளது. இதனையடுத்தே குறித்த நிறுவனத்தின் உற்பத்திக்கு இடைக்காலத்…

Read More

எனது வெற்றிக்கு பாரிய பங்களித்த முஸ்லிம்களுக்கு நன்றி – ரணில் (படங்கள்)

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். நேற்று (25) இந்த வைபவம் இடம்பெற்றிருந்தது. பிரதமரின் வெற்றியை அடுத்து அமையவிருக்கும் அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாடுகளுக்கும், நாட்டின் நலனுக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனை (துஆ) நடத்தப்பட்டது. இந்த பிரார்த்தனை வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர், தனது வெற்றிக்கு பாரிய பங்களித்த கொழும்பு முஸ்லிம்களுக்கு தனது நன்றியறிதல்களையும் தெரிவித்துக் கொண்டார். வைபவத்தில் பிரதமருடன் கொழும்பிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார்,…

Read More

வெளிநாட்டு வேலை – பெருமையா? கொடுமையா?

– ஷான் – பையன் என்ன பண்றாரு…? ‘பயணத்துல இருக்காரு’ – என வெளிநாட்டு வேலையை பற்றி பெருமையாக சொல்ல கேட்கிறோம் . இன்னும் பலர் ‘camp -dubai’ என்று போட்டு மாப்பிள்ளையின் வேலை பற்றி திருமண அழைப்பிதழில் பெருமையாகப் போடுவதை காணலாம். இப்படிப்பட்ட வெளிநாட்டு வேலைக்காக, படிப்புக்காக ஆயிரக்கணக்கான  இளைஞர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ – பொதுவாக அரசியல்வாதிகளுக்குத்தான் இந்த கூற்று பொருத்தமாக இருந்தது. இப்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தி வருகிறது. வேலைக்கு…

Read More

கூட்டம் கூட்டமாய் இஸ்லாத்தில் இணையும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள்!!

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை இஸ்லாம் அதிவேகமாக கவர்ந்து வருகிறது சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ஜித்த நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் அழைப்பு மையத்த்தின் சார்பில் மாற்று மத நண்பர்களை சந்தித்து இஸ்லாத்தை விளக்கும் ஒரு நிகழ்ச்சி நடத்த பட்டது இந்த நிகழ்ச்சியில் பல பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாதோருக்கு இஸ்லாத்தை பற்றி சிறு விளக்கம் கொடுக்க பட்டது அநத விளக்கத்தின் பலனாய் 23 இளைஞர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர் அந்த அழகான காட்சிக்கு சாட்சியாய் நிர்க்கும் புகைபடம்…

Read More

சவூதியில் வாஷிங் மெஷினுக்குள் விழுந்து சிக்கிய 3 வயது குழந்தை

சவுதி அரேபியாவில் விளையாடும்போது வீட்டில் இருந்த வாஷிங் மெஷினுக்குள் தவறிவிழுந்து சிக்கிக்கொண்ட 3 வயது பெண் குழந்தையை உயிருடன் காப்பாற்ற அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய போராட்டம், ‘வைரல்’ புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களை கலக்கி வருகின்றது. பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு மழையும், அந்த குழந்தைக்கு இந்தகதி ஏற்பட காரணமாக இருந்த தாயின் அஜாக்கிரதைக்கு வசை மழையும் பெருகி வருகின்றது. அந்த தாய்க்கு…

Read More