கிழக்கு மாகாணத்தில் வரட்சி: 225,000 பேர் பாதிப்பு!
கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக சுமார் 2,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 1,25,000 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 68,000 பேரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 26,000 பேரும் இவ்வரட்சி காரணமாக நோரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடுமையான வரட்சி காரணமாக அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இங்குள்ள நிர் நிலைகளும் வற்றியுள்ளது. குடி நீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கால்நடைகளுக்கான…
