Headlines

விசாரணை நடத்த சர்வதேசத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது – ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதற்கு சர்வதேச சமூகத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் அவ்வாறான விசாரணையை கேட்பது இந்நாட்டு நீதித்துறை முறைமை தொடர்பில் நம்பிக்கையை சீர்குலைப்பதற்காகவென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் 2009ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித…

Read More

சங்காவுக்கு கோலி கடிதம்!

சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘அன்பு சங்கக்காரா,  அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் சம காலத்தில் எனக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம்தான். கிரிக்கெட்டில் நீங்கள் படைத்துள்ள சாதனைகளை விளக்க வார்த்தைகளே கிடையாது.பல இளம் வீரர்களுக்கு ஊந்துகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள நீங்கள்  கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்புக்காக  நன்றி. நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்….

Read More

இந்தியாவால் முடியாது – சீனா

இலங்கைக்கு அதிக அளவிலான முதலீடுகளையோ, நிதியுதவியையோ இந்தியாவால் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள சீன ஊடகம் ஒன்று, இதனைக் கருத்தில் கொண்டு, சீனாவுடனான நல்லுறவை இலங்கை தொடர வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது. சீனத் தொழில்நுட்பத்துடனோ, நிதிச் சூழலுடனோ இந்தியாவால் போட்டியிட முடியாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஊடகம் வௌியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை. இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரின்…

Read More

‘நான் நிறைய கடன்­பட்­டி­ருக்­கிறேன்’ – சங்கா

– எஸ்.ஜே.பிரசாத் – டொக்… என்ற அந்த ஒற்றைச் சத்தம் மட்­டும்தான் கேட்கும். திரும்பிப் பார்க்­கையில் பந்து பவுண்­டரி கயிற்றைத் தொட்­டி­ருக்கும். இனி அந்த சத்தம் கேட்­காது… ஆட்­ட­மி­ழந்­து­விட்டோம் என்று தெரிந்­து­விட்டால் நடு­வரின் கை மேலெழும்­பும்­வரை காத்­தி­ருக்­காது நேர்­மை­யாக தானே வெளி­யேறும் போது ஒரு சிறு புன்னகை முகத்தில் பூக்கும். இனி அந்தப் புன்­னகை இருக்­காது… உலகில் எங்கு விளை­யா­டினால் ரசிகன் எந்த நாட்டைச் சேர்ந்­த­வ­னாக இருந்­தாலும் இவ­னுக்­காக அந்த ரசி­கனின் கைகள் தட்­டப்­படும்… இனி அந்தக் கைத்­தட்டல்…

Read More

விஹாரை தோறும் சென்றவர்களின் பாவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது

நல்லாட்சிக்கு நிற மற்றும் சின்ன பேதங்கள் எதுவும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வெள்ளை ஆடை உடுத்து மலர்க் கூடைகளை எடுத்தக் கொண்டு விஹாரை தோறும் சென்று வழிபாடு செய்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இவர்கள் எவ்வாறான நிலையைக் கொண்டிருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முனைப்பின் போது நிற, கட்சி அல்லது சின்ன பேதங்கள் கிடையாது….

Read More

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

அவருக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இதற்கு முன்னரும் பிரதமரின் செயலாளராக சேவைபு ரிந்த சமன் ஏன்னநாயக்க அவர்கள் இலங்கையின் பொதுநிர்வாக சேவையிலுள்ள அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியாவார். திரு சமன் ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பட்டதாரி என்பதோடு தன்னுடைய பொதுநிர்வாக முதுமணி பட்டப்படிப்பினை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திலும் நிறைவு செய்துள்ளார். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான…

Read More

வடக்கு கிழக்கு தமிழ்மாநில அதிகார அலகு; ஆலோசனைகள் விரைவில்

வடக்கு – கிழக்கு தமிழ்மொழி மாநிலத்திற்கென ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விதந்துரைத்துள்ள ஒரு நீண்ட காலத்துக்கான தீர்வு தேவையென்ற போதிலும், அதற்கு இன்னும் ஒரு படிமேலே சென்று நீடித்து நிலைக்கத்தக்கதான ஒரு நிரந்தர தீர்வை அடைவதற்கு வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து இயங்கவேண்டுமென முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் (எம்.என்.ஏ) தலைவர் எம்.ஐ.எம்.ஸெயின் கூறினார். முஸ்லிம் தேசியவாதிகள் முன்னணியின் வருடாந்தக் கூட்டம் அண்மையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே மேற்படி கூறினார். அவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்…

Read More

இலங்கையை வந்தடைந்தார் நிஷா பிஸ்வால்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று  அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

Read More

துபாயில் 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், நேபாள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கு பணி புரிகின்றனர். அவர்களில் கடந்த ரமலான் மாதத்தில் 330 பேர் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றனர். துபாய் முஸ்லிம் நாடாக இருந்தாலும் பிற மதத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. துபாயில் இந்துக்கள் வழிபட ஏற்கனவே இரண்டு கோவில் உள்ளது, தற்போது அபுதாபியிலும் கோவில் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோவில் முஸ்லிம் நாடான…

Read More

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலகின் மிக சிறந்த இராணுவ தளபதியாவார் – அமெரிக்கா

அமெரிக்காவை சார்ந்த ரிச்சர்ஸ் என்பவர் உலகில் சிறந்த இராணுவ தளபதிகள் பற்றிய ஓரு ஆய்வை மேர் கொண்டார் இவர் அமெரிக்காவின் அரசு பணிகள் பலவற்றில் பணியாற்றியவர். அமெரிக்க உளவு நிறுவனத்தின் தலைமையகத்திலும் பணியாற்றியவர் 40 க்கும் அதிகமான நுல்களை எழுதியவர் இவர் இராணுவ தளபதிகள் பற்றி மேர் கொண்ட ஆய்வில், உலகின் மிகசிறந்த இராணுவ தளபதியாக நமது உயிருக்கு உயிரான உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களை அறிவித்தள்ளார். முஹம்மது நபி அவர்களை உலகம் ஒரு ஆண்மிக தலைவராக தான் பார்க்கிறது….

Read More

Coca-Cola வுக்கு எதிராக இலங்கை அரசு அதிரடி

பல்தேசிய நிறுவனமான Coca-Cola நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. கடுவலை பிரதேசத்திலுள்ள Coca-Cola நிறுவன தொழிற்சாலையின் சுரங்க எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அதிகார சபை Coca-Cola நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது. அத்துடன் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதித்துள்ளது. சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையினால் குழப்பமடைந்துள்ள…

Read More

ரஷ்ய தலை நகர் மாஸ்கோவில் நடமாடும் இறை இல்லம்!

ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இறை இல்லங்களுக்கு அங்கு பற்றாகுறை ஏர்பட்டுள்ளது. இந்த குறையை போக்குவதர்காக ரஷ்ய முஸ்லிம்கள் நடமாடும் இறை இல்லங்களை உருவாக்கியுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த நடமாடும் இறை இல்லங்களை கொண்டு நிறுத்துவதின் மூலம் இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகளுக்கு உதவும் முடியும் என்பதால் இந்த திட்டத்தை மேலும் பரவலாக்க ரஷ்ய முஸ்லிம்கள் திட்டங்களை வகுத்து வருகின்றனர். நடமாடும் இறை இல்லத்தை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்

Read More