அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதியுடனான இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறுபான்மை கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக தயாரிக்கப்படும் யோசனைகள் எதிர்வரும் 13ஆம் திகதி…
