1959 இல் பண்டாரநாயக்காவை படுகொலை செய்தது போன்று, மைத்திரியை படுகொலைசெய்ய முயற்சி – ராஜித சேனாரத்ன
-எம்.ஏ. எம். நிலாம்- ஜனாதிபதியின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, அன்று 1959 பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு முயற்சி இன்றும் காணப்படுவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாட்டை மக்கள் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மைக் காலமாக சில சக்திகள் ஜனாதிபதி…
