Headlines

மட்டு.மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

ஜவ்பர்கான்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி, ஏத்துக்கால்,பூநொச்சிமுனை, பாலமுனை, நாவலடி, பாலமீன்மடு உட்பட பல இடங்களில் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக செயலிழந்துள்ளன. இதனால் கடல் மீன்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடற்றொழிலாளர்கள் தமதுபடகுகளையும் வள்ளங்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இடம்மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இம்மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடும் மழை பெய்துள்ளது.24 மணிநேரத்தில்…

Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முன்னாள் அமைச்சர் பெளசியின் மகன் நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு….

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி இனிமேல் படம் வரைய மாட்டேன் : சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் கேலி சித்திர ஓவியர் ரொனால்ட் லோஸியர் அறிவிப்பு….!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி நபிகள் நாயகம்ம் அவமதித்து கேலி சித்திரம் வரைந்த சார்லி ஹெப்டோவின் தலைமை ஓவியர் மனம் திருந்தினார் இனி நபிகள் நாயகத்தை அவமதிக்கும் விதத்தில் எந்த கேலி சித்திரத்தையும் வரைய மாட்டேன் என்றும் அறிவித்தார். சார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டை சார்ந்த கேலி சித்திர பத்திகை 2006 ஆம் ஆண்டில் இருந்தே நபிகள் நாயகம் தொடர்ப்பான பல்வேறு கேலி சித்திரங்களை வரைந்து முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்தது அனைவரும் அறிந்த விசயம் இந்த…

Read More

அம்பியூலன்ஸ் வண்டிக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்று காலை தெரணியகல வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் வாகனமொன்றை பின்னால் எடுக்க முற்பட்ட போது நடந்த விபரீதம்.

Read More

லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட – லுனுவல பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வல்லபட்டை கொண்டு சென்ற ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடம் 2000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஓப்பனாயக்க பொலிஸ் நிலைய சார்ஜன் இன்று பலாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Read More

கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து!

பிரித்தானிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமரூனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவுடன் இலங்கை மிக நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read More

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இடியுடன்மழை!

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (11) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் பல்வேறு கரையோரங்களிலும் காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம் காணப்படுகிறது.  மேலும் வடக்கு மற்றும் கிழக்கு  கடலோரங்களில் காலையில்  மழைக்கான சாத்தியம் நிலவும் குறிப்பாக புத்தளம் மாத்தறை கொழும்பு ஊடாக காலி முதலான கடலோரங்களில் காலையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய…

Read More

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு வழக்கு பின்னணி: 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற…

Read More

கொழும்பு நோக்கி வந்த விமானம் ஏன் திரும்பிச் சென்றது தெரியுமா?

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன் இவ்வாறு திரும்பிச் சென்றது என்பதற்கான காரணம் தற்போது வௌியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குடித்து விட்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேஷியன் ஏயார்லயின்ஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் இன்று காலை 10.06க்கு நாட்டை…

Read More

நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும். இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…

Read More

காணாமல் போதல் தொடர்பான ஐ.நா குழு இலங்கை வருகிறது

பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இக்குழு இலங்கையில் விஜயம் செய்யவுள்ளது. பலாத்காரமாக-விருப்பமின்றி காணாமல் போகச் செய்தல் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் 6ம் திகதி ஆரம்பித்து 15ம் திகதி நிறைவுபெறவுள்ள நிலையில், ஐவர் அடங்கிய குழு இலங்கை வரவுள்ளது. 30 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற காணாமல் போதல் தொடர்பான 400 முறைப்பாடுகள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read More