Headlines

பிணை எடுக்க எவருமில்லாத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த கைதி மரணம்

அப்துல்லாஹ்: சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் பிணை எடுக்க எவரும் முன்வராத நிலையில் 10 வருடமாக சிறையிலேயே காலங்கழித்த கைதியொருவர் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறையில் மரணமாகியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த 70 வயதுடைய பஷீர் சேகுதாவூத் என்பவரே சிறையிலிருந்தவாறு மரணித்துள்ளார். இந்தக் கைதிக்கு உறவினர்கள் எவரும் இல்லை என்கின்ற நிலையில் இவரை சரீரப் பிணையில் வெளியில் எடுக்க யாரும் முன்வரவில்லை. சுமை தூக்கும் தொழிலாளியான இவரை முதலாளி ஒருவர் கிண்டலடித்தார் என்பதற்காக…

Read More

வீடடற்ற 300 குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாசவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ”சமட்ட செவன” 50ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் குருநாகலையில் வீடடற்ற 300 குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந் நிகழ்வு நேற்று (26)ஆம் திகதி. குருநாகலையில் கிரின் விளேஜில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வீடமைப்பு…

Read More

யெமன் நாட்டை பாதுகாக்க 10 முஸ்லிம் களத்தில் – சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

சவூதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகள் இணைந்து யெமனில் சியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. யெமன் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி அரசுக்கு ஆதரவாகவே பிராந்திய நாடுகள் இத்தாக்குதலை நடத்தி வருகிறது. எனினும் இந்த தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் சவூதி  அரேபியாவை வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் யெமனின் இறைமையை மீறுவதென்றும் இரத்த வெள்ளத்தையே ஏற்படுத்தும் என்றும் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் சாரிப் எச்சரித்துள்ளார். யெமன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு…

Read More

பழுதடைந்த பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் சன்மான

பொருட்களை பதுக்கி வைப்போர், பழுதடைந்த, தரம் குறைந்த, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு நிதிச் சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் பாதிக்கப்படுவதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

Read More

இன்று பூமிக்கு அண்மையில் வரும் குறுங்கோளால் – நாசா!

வெள்ளிக்கிழமை 2014 YB35 என்று பெயரிடப் பட்ட ஓரளவு பெரிய குறுங்கோள் (asteroid) ஒன்று பூமிக்கு அண்மையில் அதாவது பூமியில் இருந்து 2.8 மில்லியன் தொலைவில் கடந்து செல்வதாகவும் இது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை விட 11.7 மடங்கு அதிக தூரத்திலே தான் கடந்து செல்வதால் இது பூமியுடன் மோதாது எனவும் இதனால் ஆபத்தில்லை எனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது. அரிஷோனா பல்கலைக் கழகத்தின் கட்டெலினா வான் ஆய்வுப் பிரிவால் கண்டு…

Read More

பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, சமுா்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பாகிஸ்தான் நாட்டின் பதில் உயர்ஸ்தானிகர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Read More

மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சுமார் ஒரு மணித்தியாலமாக நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒருசில கொலை சம்பவங்கள் குறித்து தாம் அறிந்திருப்பதாக அண்மையில் ஊடகங்கள் வாயிலாக மேர்வின் சில்வா கூறிய கருத்துகளின் பிரகாரம் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார். முன்னாள் அமைச்சரிடம், அவர் அறிந்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதுடன், வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.

Read More

உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது.

எம்.எம்.ஜபீர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஸ்தாபக தலைவர் மறைந்த மனிதர் மர்ஹூம் எம்.எம்.எச்.அஷ்ரப் அவர்களினால் 1996 ஆம் ஆண்டு புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது. இதன் காரணமாக பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படாமலுள்ள தபாலக கட்டிடத்தில் உப தபாலகம்…

Read More

மேற்குலகில் தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது

தொழில்மயமான நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐம்பது சதவீதத்தால் அதிகரித்து எட்டு லட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது.சிரியாவிலும் இராக்கிலும் நடந்துரும் மோதலே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என அகதிகள் நலனுக்கான ஐநா அமைப்பு கூறுகிறது. துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பல லட்சம் பேர் ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.மேற்குலக நாடுகள் கூடுதலான அகதிகளுக்கு அடைக்கலம் தர வேண்டும் என யு என் ஹெச் சி ஆர்…

Read More

இலங்கை பணிப்பெண்கள் இருவரின் சடலங்கள் சவுதியில் மீட்பு

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது. இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக நசுரா என்றும் அவர் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார். தான், பணிப்பெண்ணாக இருந்த எஜமானின் வீட்டு எஜமானி தன்னை தாக்கியதுடன் பல்வேறான துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தினார். அத்துடன் சில…

Read More

பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் – பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

பங்களாதேஷ் நாட்டின் 44 ஆவது தேசிய சுதந்திர தினம் நேற்று 26/03/2015 கொழும்பு தாஜ் சமுத்ரா (Thaj samudra) ஹோட்டலில் நடைபெற்றது, இதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு

இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் 6 ஆவது சந்திப்பு நேற்று (26/03/2015) அன்று ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 40 நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் ஏற்றுமதியில் நிறுவனங்கள் எதிரநோக்கும் பல பிரச்சினைகளை முன்வைத்தனர். அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக சம்மந்தப்பட்ட சகல திணைக்களம், அமைச்சுக்களின் பிரதாணிகளும் கலந்துகொண்டதுடன் ஏற்றுமதியாளர்களின் சுமார் 50க்கு மேற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுவழங்கப்பட்டது. இதில் ஏற்றுமதி அதிகார சபை தலைவர் உற்பட…

Read More