Headlines

வீடடற்ற 300 குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன்




அஸ்ரப் ஏ சமத்

வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாசவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ”சமட்ட செவன” 50ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் குருநாகலையில் வீடடற்ற 300 குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டது. இத் திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந் நிகழ்வு நேற்று (26)ஆம் திகதி. குருநாகலையில் கிரின் விளேஜில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு 300 குடும்பங்களுக்கும் காசோலைகளை வழங்கி வைத்தாா். இந் நிகழ்வில் பிரதியமைச்சா் எம். எஸ். அமீா் அலியும் கலந்து கொண்டாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *