Headlines

மட்டு-குருக்கள்மடம் புதை குழியினை விரைவாக தோண்டுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தோண்டப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தொடர்ச்சியான வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஏற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தினை பூமிக்கு கீழேயுள்ள எச்சங்களை கண்டறிய ஸ்கேன் கருவியினூடாக குறிப்பிட்ட அந்த பகுதியினை ஆய்வு செய்யுமாறு களுவாஞ்சிக்குடி…

Read More

சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு வெளிநாடு செல்ல தடை

வெளிவிவகார முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் கடவுச் சீட்டை இன்று நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றிக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான போதே அவரது கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான்…

Read More

பாராளுமன்றத்தில் முதன்முதலில் தமிழில் பேசிய மூதூர் முஹம்மத் அலி

-NM Ameen  – 1950களில் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கண்ணியமான அரசியல் வாதிகளில் மூதூர் எம்.ஈ.எச். முஹம்மத் அலி முக்கியமானவர். மூதூரின் பாரம்பரிய குடும்பமான எஹ{த்தார் ஹாஜியாரின் மூத்த மகனான அல்-ஹாஜ் முஹம்மதலி 1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி பிறந்தார். கிண்ணியா அரசினர் முஸ்லிம் வித்தியாலயம், திருமலை ஹிந்துக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் கல்விபயின்று ய+னானி வைத்தியத்துறையிலும் கல்வி கற்றார். 1952ஆம் ஆண்டு மூதூர் தொகுதியில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற…

Read More

இலங்கையருக்கு அதிஸ்ரம்! விசா இல்லாமல் 39 நாடுகளுக்கு பறக்கலாம்

இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை….

Read More

அல்லாஹ் இந்த சகோதரிக்கு சுவர்கத்தை வழங்கி வைப்பானாக! நவீன இஸ்லாமிய பெண் தொழிலதிபர் இஷ்ரத்!

மும்பை ஷாலிமார் ஹோட்டல்-தெற்கு மும்பையில் அமைந்துள்ள சுவையான உணவுகள்  கிடைக்கும் பெரிய உணவகம் பயனுள்ள கல்வியுடன் மார்க்க கல்வியையும் போதிக்கும் ஷஃபா-மாறுபட்ட பள்ளிக்கூடம். இவற்றை வெற்றிகரமாக நிர்வகிப்பவர் ஒரு முஸ்லிம் பெண் ஆவார். அதுவும் நிகாப் எனும் முகத்தை துணியால் மறைக்கும் முஸ்லிம் பெண். வாருங்கள் இஷ்ரத்தை சந்திப்போம். 42 வயதான கணவனை இழந்த கைம்பெண்ணாக 5 பிள்ளைகளுடன் வாழ்க்கையை நடத்தும்  இஷ்ரத், மிகவும் வெற்றிகரமாக பெரிய உணவகத்தையும், பள்ளிக்கூடத்தையும்  நிர்வகித்து வருகிறார். உ.பி.மாநிலம் ஆஸம்கரை சார்ந்த…

Read More

அல்லாஹூ அக்பர்! அமெரிக்காவின் ‘ டொமினிக் எஸ்லே ‘ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்

அமெரிக்காவின்  பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். வழக்கமாக  இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர்  பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும்  சரமாரியாக  கொடுத்து  வருகின்றனர். எதைப் பற்றியும்  கவலைபடாமல்  டொமினிக்  தனது  வாழ்வியலை  இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில்  வைப்போம். ‘பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன….

Read More

பள்ளி இமாம்களின் குறைவான ஊதியமும், அவர்களின் எதிர்காலமும்

நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி விரிவுரையாளர் ஆலிம்கள் உலமாக்களை ஏதாவது சொல்லிவிட்டால் கொதித்தெழும் நமது சமூகம் உண்மையில் உலமாக்களை நேசிக்கிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதிலாகும். பள்ளிவாசல்களில் இமாமாக பணி புரியும் உலமாக்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து விட்டு நிர்வாகிகளும் ஊர்மக்களும் உலமாக்கள் உலமாக்கள் என்ற வாய் கிழிய கத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஊரில் ஹோட்டலில் ரொட்டி அடிப்பவர் மற்றும் சாதரண கூலித்தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது முப்பதாயிரம் ரூபாய்கள் வருமானம் கிடைக்கிறது. ஆனால் பள்ளி…

Read More

மாஷா அல்லாஹ்! தொழுகையின் பின் நடிகர் கராத்தே ராஜா

புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நடிகர் கராத்தே ராஜா தொழுகையை நிறைவெற்றிய பின். அல்லாஹ் அக்பர் !! . ( வணக்குத்துக் குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் இறுதித் தூதரும் ஆவார்கள்.அல்லாஹ் மிகப் பெரியவன் ) .

Read More

நள்ளிரவில் எழுந்து ஐஸ் வாங்குவதற்காக தனியாக பஸ் ஏறிச் சென்ற 4 வயது சிறுமி

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தனக்கு மிகவும் ஐஸ் வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி, சாலையில் சென்ற பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி தனியே பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது நள்ளிரவில் வீட்டின் பின் வாசல் கதவு வழியாக வெளியே வந்த அனபெல் என்ற அந்த 4 வயது சிறுமி. இரவு நேரத்தில் அணியும் பைஜாமா உடையின் மீது ஒரு மழை கோட்டினை அணிந்தவாறு வீட்டின்…

Read More

விரைவில் மதினா சர்வதேச விமான நிலையம்!

தி. ரஹ்மத்துல்லா சவூதி அரேபியா மதினா நகரில் கட்டப்பட்டு வரும் புதிய சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இந்த விமான நிலையம் சோதனை இயக்கம் செய்யப் பட இருக்கிறது. வெற்றிகரமான சோதனை இயக்கத்திற்குப் பின், இந்த விமான நிலையம் விரைவில் திறக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. இந்த விமான நிலையத்தில் 16 புறப்பாடு வாயில்கள் 32 பாலங்கள் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. 64 போர்டிங்…

Read More

ரத்கம பிரதேச சபை தலைவர் கொலை : சந்தேக நபர் பொலிஸில் சரண்

ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் புஷ்பகுமார கொலையுன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராகிய ஜனித் மதுசங்க த சில்வா பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறு மீளாய்வுக்கான இறுதித் திகதி ஏப்ரல் 24

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பப்படிவம் பெறுபேறு பட்டியலுடன் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் பரீ்ட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More