Headlines

‘ஜேர்மன்விங்கஸ்’ விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

விபத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு விமானத்தின் குரல் பதிவு பெட்டியில் இருந்து பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து தெரிய வந்ததாகக் கூறப்படும் சில முக்கிய விடயங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானம் பிரான்சில் விபத்துக்குள்ளான நாளில் வானிலை சீராகவே இருந்தது. இதனால் விபத்துக்கான பிரதான காரணி வானிலையாக இருக்க முடியாது என்பது ஓரளவுக்கு உறுதியாகியது. மேலும் வேறு  எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்றா என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இந்நிலையில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட்…

எம்.எம்.ஜபீர் பொத்துவில் பிரதேசத்திற்கான இளைஞர் அமைப்பாளராக எம்.ஐ.எம்.சஹூட் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களினால்; கொழுபிலுள்ள அமைச்சரின் அலுவலத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (25) நியமனம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும்…

Read More

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்

தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்த புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இந்த தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்…

Read More

தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க கோத்தபாய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்: அஸாத் ஸாலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அஸாத் ஸாலி மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்…

Read More

இரண்டு நாட்களில் 10 பேர் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பம்!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல், 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. பிரஜாவுரிமை சட்டம் 1948ஆம் 18 ஆம் இலக்கத்தின் கீழ் இலங்கையுடன் இரட்டைக்குடியுரிமை உடன்படிக்கையை கொண்டுள்ள 7 நாடுகளின் பிரஜைகள் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன், சுவிட்ஸலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் பிரஜைகள் இலங்கையில் இரட்டைக்குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களையும் விபரங்களையும் www.immigration.gov.lk என்ற இணைத்தளத்தின்…

Read More

Lanka commences GSP+ process with EU

As bilateral trade between EU and Sri Lanka edged to $5Bn mark, Sri Lanka has commenced its talks on the recovery of the GSP Plus from EU on 24 March in Colombo, strengthened by previous positive vibes from EU-and  talks were so comprehensive, it involved even technical trade capacity support to Sri Lanka from the…

Read More

தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது: அஸ்வர் கடும் கவலையாம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டு வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியின் போது விளம்பர அனுசரனையாளர்கள் தமிழ் மொழியை புறக்கணிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்; ஊடக துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் முறையிட்டுள்ளார். மேற்படி “ஹதவத்தின் சிறிலாங்கியோ” என்ற விளம்பர நாமம் சிங்களத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது தமிழில் எழுதப்படவில்லை. எனவே இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேரடியாக…

Read More

இந்திய மீனவர்கள் 54 பேர் நாடு திரும்பினர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 54 இந்திய மீனுவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்கள் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

லீ குவான் யூ இறுதிச்சடங்கில் அமெரிக்கா சார்பில் கிளிண்டன்

சிங்கப்பூரின் தந்தை மற்றும் ‘நவீன சிங்கப்பூரின் சிற்பி’ என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்றது. இதில் கலந்துகொள்ள முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமையிலான அமெரிக்கா குழு சிங்கப்பூருக்கு செல்வதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பில் கிளிண்டன் தலைமையிலான குழுவில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கரும் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று அந்நாட்டு…

Read More

இந்தோனேசியாவில் இரு ஆஸ்திரேலியர்களின் கருணை மனுவை அதிபர் நிராகரித்த விவகாரம்: நீதிமன்றத்தில் அப்பீல்

இந்தோனேசியாவின் பாலி தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற ஆண்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே நிறைவேற்றப்படவிருந்த நிலையில், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்பட்டது. சில தொழில்நுட்பக் காரணங்களால் தண்டனை மூன்று வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக இந்தோனேசிய துணை அதிபர் யுசுப் கல்லாவின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவரது கருணை மனுவையும் அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read More

“சிங்களவர் மெளனம்! தேசிய கீதம் அழிப்பு!” பாணந்துறை நகரில் சுவரொட்டிகள்.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக பாணந்துறை நகர்ப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘ஹெலவிரு பலமுழுவ’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளில் சிங்களவர் மெளனம்! தேசிய கீதம் அழிப்பு! தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற வாசகங்கள் இச்சுவரொட்டிகளில் காணப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை (21) வாதுவையில் இடம்பெற்ற மஹிந்த இல்லாத தேசம்? என்ற தலைப்பிலான “ஜாதிக பலய’ என்ற அமமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவரொட்டிகளும் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இதேவேளை கடந்த சனிக்கிழமை…

Read More

50 ரூபாவுக்கு சோற்றுப் பார்சல் திட்டம் நேற்று ஆரம்பம்

ஒரு கிலோ அரிசியில் சுமார் ஆறு பேருக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் நேற்று ஆரம்பமானது. வத்தளை, ஹுனுப்பிட்டிய விகாரையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்ட அந்நிகழ்வில் முதல் நாள் விகரதிபதியின் வேண்டுகோளின் படி சுமார் ஆயிரம் பேருக்கு நேற்று பகல் இலவசமாக சோற்றுப் பார்சல்கள் வழங்கபட்டன. இன்று முதல் கொழும்பில் இன்னும் சில இடங்களிலும் ஆரம்பமவுள்ள இத்திட்டம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read More