Headlines

இன்று ஜும்மாவின் பின்னர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நடிகர் கராத்தே ராஜா

தமிழ்நாடு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மணலூரை சேர்ந்தவர் கராத்தே ராஜா என அழைக்கப்படும் நடிகர் ராஜா புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் சகோ. யாசர் அரபாத் தம் முகநூலில் சற்றுமுன் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில் குணசித்திர, வில்லனாகவும், நடிகராகவும், பாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளார். சகோ. யாசர் அரபாத் அவர்களின் முகனுளில் இருந்து.. அல்லாஹ் அக்பர் !! நடிகர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் !!…

Read More

யானைகளின் அட்டகாசத்தால் இரவு நேரங்களில் அச்சத்துடன் காவத்தமுனை கிராம மக்கள்

வாழைச்சேனை நிருபா்:மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் இரவு நேரத்தில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டங்களை சேதப்படுத்துவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காவத்தமுனை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் இன்று அதிகாலை 03.00 மணியளவில் உட்புகுந்த இரண்டு யானைகள் அத்தோட்டத்தில் உள்ள முப்பது தென்னங்கன்றுகளையும் வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் அண்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள் இக் கிராமத்திற்கு…

Read More

விமானத்தின் இறுதி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி, கதவை பலமாக தட்டிய தலைமை விமானி : துணை விமானி சதி :பரபரப்பு தகவல்

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டகொள்ளவில்லை எனவும் தலைமை விமானி கதவை பல முறை பலமாக தட்டியும் உதைத்துள்ளதாகவும் ஆனால் துணை விமானி அமைதியாக இருந்து விமானத்தை மலையில் மோதியுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்து ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ எயார்…

Read More

யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரதமர்

வடக்குக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது இன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து பிரதமர், மீள் குடியேற்றம் தொடர்பிலும், புனருத்தாபனம் பெற்ற இளைஞர்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமரின்…

Read More

கண்டி மாவட்டத்தில் நீர்விநியோக சபைக்கு வரும் மக்கள் அசெளகரியம். பலர் ஏமாற்றத்துடன்..

-ஜே.எம்.ஹபீஸ்- நீர்வினியோக வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக கண்டி மாவட்டத்தில் தமது அன்றாடத் தேவைகளக்காக நீர்வினியோக சபைக்கு சமூகமளித்த பொது மக்கள் பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.(27.3.2015) கெடம்பே, கட்டுகாஸ்தோட்டை பஹல கொண்டதெனிய, மற்றும் பொல்கொல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நீர்வினியோக வடிகால் அமைப்பு சபையியன் பிராந்தியக் காரியாலயங்களில் ஊழியாகள் பணியில் ஈடபடாத காரணத்தால் பொது மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் சிலர் வெளியே காத்து நிற்பதையும் படத்தில் காணலாம். இது தொடாபாக…

Read More

பணம் வருவது நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகல்:ஹசாரே

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களிடமிருந்து தமக்கு பணம் வருவது நிரூபிக்கப்பட்டால் தாம் பொது வாழ்வில் இருந்தே விலகி விடுவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெரும் நிறுவனங்கள் தமக்கு பணம் கொடுத்து, அவர்களின் நலனுக்காக தம்மை நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த சொல்வதும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் தாம் பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுவதாக ஹசாரே கூறியுள்ளார். அவரது சொந்த கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அவர், தமது…

Read More

ஆப்பிள் இயக்குனர் டிம் குக் அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு

உலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனர் டிம் குக் தனது அனைத்து சொத்துகளையும் தானம் செய்ய முடிவு செய்துள்ளார். தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கும் முக்கிய ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான சொத்துகளை பொது சேவைக்கு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க், ஆரக்கிள் கார் நிறுவனத்தின் லாரி எல்லிசன், பங்கு சந்தை கில்லாடி வாரன் பப்பட் போன்றவர்கள் ஏற்கனவே மருத்துவம், சுற்றுசூழல்…

Read More

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார்: சிரியா அதிபர் ஆசாத் அறிவிப்பு

உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் என சிரியா அதிபர் பஷிர் அல் – ஆசாத் அறிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக சிரியாவில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போரினால் பல லட்சம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆசாத், ’அமெரிக்கவுடன் பேச்சு நடத்த தயாராகவுள்ளேன். தற்போது உள்ள சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது சிரியாவுக்கு நல்ல விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் எங்களை மரியாதையுடன்…

Read More

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியவை

அவுஸ்திரேலியா சட்டவிரோத குடியேற்றத்தற்கு எதிராக இலங்கை மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலிய அரசு பாராட்டியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தலைமையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அரசின் சர்வதேச மற்றும் வர்த்தக அலுவல்கள் திணைக்களத்தின் குடியகல்வு தொடர்பான உயர்ஸ்தானிகர்  எண்ட்ரூ கொலோன்சின்விஸ்கி உட்பட அதிகாரிகள் நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்தபோதே இப்பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன்  இதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை…

Read More

ஜனாதிபதி தம்பி மீது ஆயுதத்தால் தாக்கிய சம்பவம்.. நடந்தது இதுதான்

– எம்.எப்.எம்.பஸீர் – ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இளைய சகோ­த­ர­ரான ‘வெலி ராஜு’ என பர­வ­லாக அறி­யப்­படும் பிரி­யந்த சிறி­சேன மீது சர­மா­ரி­யான கோடரி தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த தாக்குதல் நேற்று இரவு 7.00 மணி­ய­ளவில் பொலன்­ன­றுவை, புதிய நகர பிர­தே­சத்தின் ஹத்­தரே எல பகு­தியில் உள்ள வாகனம் திருத்தும் இட­மொன்றின் அருகே வைத்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. பிரி­யந்த சிறி­சே­னவின் நண்­ப­ரான 34 வய­து­டைய ஹப்­பு­தந்­தி­ரிகே துஷான் லக்மால் என்­ப­வரால் இந்த தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் தாக்­கு­தலில் பிரி­யந்த சிரி­சே­னவின் தலையின்…

Read More

கோத்தபாயவே, லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு காரணம். சி.ஐ.டி யினரிடம் போட்டுக்கொடுத்த மேர்வின் சில்வா

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் கூறியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தன்னிடம் இருக்கும் சகல தகவல்களையும் தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேர்வின் சில்வா, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார். அது சம்பந்தமான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகியதுடன் மேர்வின் சில்வா…

Read More

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஆண்டுக்கு 83 நாட்கள் என்ற வகையில் மூன்று வருடங்களுக்கு இலங்கை கடற்பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று அரசாங்க உத்தியோகப்பூர்வ இணையதளம் இன்று (27) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்- மீனவர் பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக நாம் கலந்துரையாடினோம். இலங்கை கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது….

Read More