Headlines

அப்பாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் -நாமல் ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர். இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, ‘யோஷித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்….

Read More

6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி பலி!

கொழும்பு – கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 17 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சர்வதேசத் தரத்திற்கேற்ப நியாயமான உள்ளக பொறிமுறையை ஆதரிக்கிறோம் – ஜெப்ரி பெல்ட்மன்

சர்வதேசத் தரத்திற்கு அமைவான, நியாயமான உள்ளக பொறிமுறையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டினார். காணி, தடுத்துவைத்தல், காணாமற்போதல் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் இராணுவ பிரசன்னம் தொடர்பில் குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தின் தலைவர்களை தாம் வலியுறுத்துவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்….

Read More

பர்தா,நிகாப் உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்-ஞான­சார

முழு­மை­யாக முகத்தை மறைக்கும் தலைக் கவ­சங்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­டு­மாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட­வேண்டும். என தெரி­விக்கும் ஞான­சார தேரர் முகம் மூடிய முஸ்லிம் உடை­க­ளுக்கு தடை விதிக்­கா­த­வரை யாரும் தலைக்­க­வச சட்­டத்­தினை பின்­பற்ற வேண்டாம் எனவும் குறிப்­பிட்டார். பொது பலசேனா பெளத்த அமைப்­பினால் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் தலைக்­க­வச சட்டம் தொடர்பில் வின­வி­ய­போது அவ் அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார…

Read More

யோசித்த ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகனும் அவரது பாதுகாப்பு பிரிவு உறுப்பினருமாகிய யோசித்த ராஜபக்ஷவிற்கு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது. நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே யோசித்த ராஜபக்ஷ குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரியில் நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையொன்றில் இருந்து இருவர் மாத்திரம் பயணம் செய்யும் சிறய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டது. அதன்பின் அந்த விமானத்திற்கு…

Read More

எந்தவொரு அரசியல் குழுவுடனும் ஒப்பந்தம் செய்யவில்லை – ஜனாதிபதி

தான் எந்தவொரு அரசியல் குழுவுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து மக்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். கிழக்கு…

Read More

ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச, ஊழல் பிரிவு விசாரணை!

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

நேபாளத்தில் விமான விபத்து

துருக்கி நாட்டின் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கியின் ஸ்தான்புல் நகரிலிருந்து வந்த விமானமொன்று ‘திரிபுவன்’ விமானநிலையத்தில் தரையிரங்க முற்பட்ட வேளையில் ஓடுபாதையை விட்டு விலகியுள்ளமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 238 பேர் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர்

உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது. அவ்வகையில் சிங்கப்பூரை அடுத்து பரிஸ், ஒஸ்லோ, ஜுரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, உடை, மின்சாரம், வீட்டுவரி, தொலைபேசி, இணையத்தளம், குடிநீர், கழிவுநீர் போன்ற 160 செலவீனங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை…

Read More

விமானத்தில் குழந்தை இறந்தது! அபுதாபியில் அவசர தரையிறக்கம்

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனின் மனாமா நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருபவர் பினாய் முத்கல். விடுமுறைக்காக கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றிருந்த இவர் தனது மனைவி அஸ்வினி மற்றும் ஒருவயது பெண் குழந்தையுடன் இன்று கொச்சியில் இருந்து பஹ்ரைன் செல்லும் விமானத்தில் ஏறினார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை ரிஷி பிரியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் அவசரமாக அபுதாபிக்கு…

Read More

இறந்தவரின் பெயரில் தாய்லாந்திலிருந்து அனுப்பப்பட்ட 16ஆயிரம் லீட்டர் எத்னோல் சிக்கியது

அஸ்ரப் ஏ சமத் தாய்லாந்திலிருந்து எத்னோல் கொண்டுவந்த கொள்கலன் இன்று வெள்ளம்பிட்டியில் உள்ள உதவி தடுப்பு பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 16ஆயிரம் லீட்டர் கொண்ட கலண்கள் கல்சியம் கைக்குலோரைட் என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி 15ஆம் திகதி தாய்லாந்தில்லிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை பெயரிட்டுள்ள உரிமையாளரை தேடுமிடத்து அவர் ஒரு வருடத்திற்கு முன் இறந்தவரின் பெயரிலேயே இக் கொள்கலன் வரவழைக்கப்பட்டுள்ளது. இக் கம்பணி பெயரிட்டு அனுப்பியுள்ளனர். . ஆனால் அந்தக் கம்பனிக்கு இவ் விடயங்களில் இல்லாத…

Read More

எனக்கு எதிரான முறைப்பாட்டை துரிதமாக விசாரணை செய்யுங்கள் – ராஜித்த

தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்துள்ள முறைப் பாட்டை துரிதமாக விசாரணை செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியுள்ளார். அமைச்சருக்கு எதிராக தே. சு. மு. நேற்று முறைப்பாடு செய்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை துரிதமாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாகத் தெரிவித்தார். தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகக் கூறிய அவர் தே. சு. மு. முன்வைத்துள்ள…

Read More