Headlines

பேஸ்புக் கருத்தால் அமெரிக்கருக்கு சிக்கல்

பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தொழிலாளி ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்பப்படுகின்றது. ரயான் பேட் என்ற ஹெலிகாப்டர் மெக்கானிக், சுகயீன விடுமுறையில் புளோரிடாவிலுள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது முதலாளியை விமர்சித்திருந்தார். அவர் தனது “நிறுவனத்தை முதுகில் குத்துபவர்கள்” என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களின் இனத்தை அவதூறாகவும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கள் ஐக்கிய அரபு எமிரெட்ஸின் கறாரான அவதூறு…

Read More

பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம்-நிமல் சிறிபால டி சில்வா

தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முடிவடைந்து பொதுத்தேர்தல் நடக்கும் வரையிலேயே நாம் அமைதியாக உள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ஆளும் கட்சியாக நாம் மாறுவோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமெனவும் வலியுறுத்தினார். தேசிய அரசாங்கம் அமையப் பெற்றதன் பின்னர் புதிய எதிர்க்கட்சி மெளனம் காப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாம்…

Read More

துமிந்தவை பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கில்லை! -ரணில் விக்ரமசிங்க

தான் பிரதமராக பதவியேற்றதும் ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் சிரச ஊடகம் வௌியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என, ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற அமர்வின் போது, சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமரான தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்த முற்பட்டுள்ளதோடு, தனது உரிமை மற்றும் வரப்பிரசாதங்களும் மீறப்பட்டுள்ளதாக பிரதமர் நேற்று முன்தினம் (04) பாராளுமன்றத்தில் கூறினார். அதேபோல் துமிந்த சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள…

Read More

மன்னார் மாவட்டம் கல்வி முன்னேற்ற மற்றும் கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றது – றிப்கான்

இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார் மாவட்டம் கல்வி முன்னேற்ற மற்றும் கற்கை சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். முசலி கூளாங்குளம் பாடசாலையின் விளையாட்டு போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று இந்த பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்த கிடைத்தமைக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலைக்கான கட்டிடம் தொடர்பில் அமைச்சரும்,அகில இலங்கை…

Read More

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்; ஐனாதிபதி ,பிரதமருடன் கலந்துரையாடப்படும்- அமைச்சர் றிஷாத்

முனவ்வர் காதர் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் மிக விரைவில் பேச்சுவாத்தை மேற்கொள்ளப்படும். கடந்த 30 வருடங்களாக பல இன்னல்களுடன் நாட்டின் பல பாகங்களிலும் வாழும் வடபுல முஸ்லிம்களின் மீழ்குடியேற்றம்,மற்றும் அத்தியவசியதேவைகள் தெடர்பிலும் இதுவரைகாலமும் விடுவிக்கப்படாத மக்களின் விவசாய, குடிமனை கானி போன்ற முக்கிய விடயங்களை ஐனாதிபதிக்கு தெளிவு படுத்தவுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத்தெரிவித்த…

Read More

புதிய மாற்றத்திற்கான பாதை குருநாகல் மாவட்டத்திலிருந்து ஆரம்பம் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்திற்கான பாதையினை குருநாகல் மாவட்டத்தில் இருந்து எமது கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் சீசன் ஹோட்டலில் விழிப்போம்,சிந்திப்போம்,ஒன்றுபடுவோம் என்னும் தொனிப் பொருளில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். குருநாகல் மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்பாளரும்,தொழிலதிபருமான அஸார்தீன் மொயினுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…

Read More

ஜனாதிபதியின் வாக்குறுதி – நாடு முழுவதும் 1000 இடங்களில் இலவச Wi Fi

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750…

Read More

ஊழல் வழக்கில் ஆஜராகாததால் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

வங்காளதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தனது ஆட்சிக்காலத்தின்போது அரசு பணத்தில் சுமார் ஆறரை லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டியதாக அவர் மீது இரு ஊழல் வழக்குகளை தற்போதைய ஷேக் ஹசினா தலைமையிலான அரசு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் கோர்ட்டுக்கு வராததால் கடந்த மாதம் 25-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, இந்த கைது வாரண்டை ரத்து செய்யும்படி கலிதா ஜியாவின் வக்கீல் இன்று நீதிபதியிடம் மனு தாக்கல்…

Read More

இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது – பாராளுமன்றத்தில் ரணில்

மாலைத்தீவு தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் புதிய பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார். பாராளுமன்ற விவாதம்…  ரணில் விக்ரமசிங்க: முதற்தடவையாக மாலைத்தீவில் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அனுரகுமார திசாநாயக்க: இந்த வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக 99 இலட்சம் டொலர்களை, அதாவது 13,000 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. எனினும், எவ்வித விலைமனுக்கோரலும் இன்றியே இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க: இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது. அனுரகுமார திசாநாயக்க: எமது நாட்டில்…

Read More

சஜின் வாஸிற்கு சொந்தமான விமான நிறுவனம் போயிங் 727 தொடர்பில் அறிக்கை

சஜின் டி வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட விமான நிறுவனம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரக்கு விமானம் தொடர்பிலேயே அந்த அறிக்கையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போயிங் 727 ரக சரக்கு விமானம் நீண்டகாலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த காலங்களில் நாம் அறிக்கையிட்டிருந்தோம். இந்த விமானத்தைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கன்…

Read More

விமல் வீரவம்சவின் ஊழல் பைல்கள் புத்திக பத்திரனவிடம்

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சின் கீழ் உள்ள வீடமைப்புத் திணைக்களத்தில் – சிலிங்கோ பில்டர் சொசைட்டி சங்கங்கள் ஊடாக அவர்களது கம்பனியில் வீடுகளைப் பெற்றவர்கள் தமது மாதாந்த கொடுப்பனவை வீடமைப்பு திணைக்களத்திலேயே செலுத்தல் வேண்டும். இப்பணத்தினை திணைக்களத்திற்குச் செலுத்தாமல் மேஜ்ஜன்ட் வங்கியின் முன்னாள் தலைவர் ஊடக அவரது பெயரில் இப் பணம் முதலிட்டு அப்பணத்தினை அவர்கள் பெற்றுள்ளதாக இன்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க…

Read More

கூட்டு வன்புணர்ச்சியே சிறுமி சாவுக்கு காரணம் : நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களிடம் ஊரவர்கள் கதறல்

வவுனியா, கனகராயன் குளத்தைச் சேர்ந்த 16வயதுச் சிறுமி திடிரென உயிரிழந்தமைக்கு அவர் 10 பேரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமையே காரணம் என்று ஊரவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சிறுமியின் வீட்டுக்கு நேற்றச் சென்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் சிறுமியின் உறவினர்களும்,ஊரவர்களும் இதனைத் தெரிவித்தனர். சம்பவத்தை மூடிமறைத்துவிட குற்றவாளிகள் முயன்று வருகின்றனர் என்றும் ஊரவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (U)

Read More