Headlines

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா!

முகம்மட் பஹாத் பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் உள்ளார். இஸ்லாம் கூறும் ஹிஜாபின் ஊடாகவும் சாதனைகளை செய்ய முடியும் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார் ஃபாத்திமா! வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும்…

Read More

மோடி உரை ; நாடாளுமன்றுக்கு கடும் பாதுகாப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதை கருத்திற்கொண்டு கடும்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும 13ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அதற்கான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வரும் மோடி அன்றையதினம் பிற்பகல் 3. 15 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகம் முழுமையாக சோதனையிடப்படவுள்ளதுடன்…

Read More

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பாக முஸ்லீம் மாணவர்கள் மனிதச் சங்கிலி

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு ஆதரவாகவும், முஸ்லீம் மாணவர்கள் மனித சங்கிலி அமைத்த நிகழ்வு பெரும் கவனத்தை பெற்றுள்ளது. கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதன் போது தேசிய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர்கள் மனிதச் சங்கிலி ஏற்பாடு செய்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இது குறித்து அக்கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி பவாத் ஹசன் கூறிய போது “இமாம்பர்காவில் ஷியா பிரிவினருக்கு அரவணைப்பாக…

Read More

கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டது

-சற்றுமுன் சிரச – நிவ்ஸ்பெஸ்ட் FM வானொலியில் வாசிக்கப்ட்ட செய்தி எழுத்து வடிவில் உங்கள் பார்வைக்கும்- கொழும்பு துறைமுகநகர திட்டத்தின்  நிர்மாணப் பணிகள் இன்று நிறுத்தப்பட்டன துறைமுக நகரின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் கடந்த சில தினங்களாகவே நியூஸ் பெர்ஸ்ட் கவனம் செலுத்தியிருந்தது. இந்த நிர்மாணப் பணிகள் குறித்து அறிவதற்காக இன்றைய தினமும் நியூஸ் பெர்ஸ்ட் குழாத்தினர் துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதிக்கு சென்றதுடன் இதன்போது அங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதை காண முடிந்தது. இது…

Read More

அரசியல் காழ்புணர்ச்சியின் உச்ச கட்டமே அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடு…..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்சம்அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு தோற்ற ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டமையானது எமது தலைவரினால்  மேட்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்தையும் எமது கட்சியின் பாரிய வளர்ச்சியையும் கண்டு தாங்க முடியாதவர்களின் காழ்புணர்ச்சியின் உச்ச கட்டமே இந்த முறைப்பாடு என அகில இலங்கை மக்கள் காங்கிரசை பிரதிநிதிப்படுத்தும் குச்சவெளி பிரதேச சபை…

Read More

மகிந்தவின் அரசாங்கம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் பதிவு செய்வதை நிறுத்திவைத்திருந்தது- அமைச்சர் ஹலீம்

அஸ்ரப் ஏ சமத் கடந்த கால அரசாங்கம் திட்டமிட்டே பள்ளிவாசல்களை பதிவு செய்வதை நிறுத்திவைத்திருந்தது. தற்பொழுது இந்த புதிய அரசாங்கமே முஸ்லீம்களுக்கென தனியானதொரு கபினட் அமைச்சரை நியமித்தள்ளது. இதனால் முஸ்லீம்களது மத சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும். அமைச்சர் ஹலீம் மேற்கண்டவாறு நேற்று நவமணி பத்திரிகை கடந்த வாரம் அல் சபாப்புடன் இணைந்து நடாத்திய ரமழான் முபாறக் கேள்வி பதில் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு மருதானை அல் ஷபாப் தலைமையகத்தில் நவமணி ஆசிரியர் என்.எம் அமீன்…

Read More

விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ராஜித

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் முன்னைய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் 2014ஆம் ஆண்டில் 3 மாதங்கள் அமைச்சில் இருந்து இதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒவ்வொரு கிழமையும் இரண்டு நாட்கள் கலந்தாலோசித்து ஓளடத (மருந்தாக்கள்) சட்டத்தை சகல வேலைகளையும் முடித்திருந்தார். நான் தற்போதைய சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் முடிவுரை மட்டுமே எழுத முடிந்தது. தற்பொழுது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிந்தது. இதனை சமர்பிக்கும்போது ஒரே ஒரு வேறு கட்சியின் பாராளுமன்ற…

Read More

எனக்கு எதிரான முறைப்பாட்டை துரிதமாக விசாரிக்குக – அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு எனக்கு எதிராக ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை அவசரமாக விசாரணை செய்து நாட்டு மக்களுக்கு முடிவுகளை அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (06) ,லஞ்சம் அல்லது ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கு இணங்கவே அமைச்சர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் அவ் விசாரணைக்காக…

Read More

யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 9 ஆம் திகதியிலிருந்து யோசித்த ராஜபக்ஷ கடற்படை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

துறைமுக நகர் உடன் நிறுத்தம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், கொழும்பில் சீன அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த துறைமுக நகரத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்து…

Read More

கண்டி மகிந்த ஆதரவு கூட்டம்..

-Dehianga Azeem M Uzman – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் இணைந்து இன்று மாலை 3 மணி முதல் கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்திற்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில், இப்போதே மக்கள் வந்த வண்ணம் உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமானப் படுத்திவிட்ட ஆவணப்படம் – இந்தியாவில் ஒளிபரப்ப தடை

டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி தனது நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.4 குழுவினர் இந்த கற்பழிப்பு சம்பவத்தை மையமாக வைத்து இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தயாரித்து உள்ளனர். இதற்காக…

Read More