Headlines

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன. பரம்­பரை ரீதி­யான பாதிப்­புக் ­கா­ர­ண­மாக இவ்­வாறு மாறு­பட்ட தோற்­ றத்தில் பிறந்த மேற்­படி மாடு, இறைச்சி வெட்டும் நிலை­ய­மொன்­றுக்கு விற்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

இத்தாலிய கிராமத்தை மூடிய 8 அடி உயர பனி

இத்­தா­லிய கிரா­ம­மொன்றில் ஒரே நாளில் 100 அங்­குல (சுமார் 8 அடி) உய­ரத்­திற்கு பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள் ளது. ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலை­வி­லுள்ள கப்­ர­கொதா கிரா­மத்தில் இடம்­பெற்ற இந்த பனிப்­பொ­ழி­வா­னது தனி­யொரு நாளில் இடம்­பெற்ற அதி­க­ள­வான பனிப்பொழிவு என்ற உலக சாத­னையை படைத்­துள்­ளது. மேற்­படி பனிப்­பொ­ழி­வை­ய­டுத்து மக்கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறுவதற்கு பனிக்­ கு­வி­ய­லி­னூ­டாக சுரங்­கப்­பா­தை­களை தோண்ட நேர்ந்­துள்­ளது. இந்தப் பனிப்­பொ­ழிவு 1921 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தில் சில்வர் லேக்…

Read More

யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிப்பு

யோசித்தவுடன் இணைத்து பேசப்பட்ட இலகுரக விமானம் விமானப்படை நூதனசாலைக்கு கையளிக்கப்பட்டது. இரத்மலானையில் உள்ள விமானப்படையின் நூதனசாலைக்கு அதனை அதன் உரிமையாளர் ரோய் விஜேவர்த்தன கையளித்தார். இந்த விமானத்தை வித்தியாஜோதி கலாநிதி ரோய் விஜேவர்தனவே தயாரித்தார். இந்தநிலையில் அதனை அவர் சிங்கள திரைப்பட இயக்குநர் சந்திரன் ரட்ணத்துக்கு வழங்கினார். பின்னர் அது யோசித்தவுக்கு வழங்கப்பட்டது. இந்த விமானத்தை விமானப்படையின் நூதனசாலைக்கு வழங்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் மத்தியஸ்தம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

86 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 86பேரும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடற்படையினரால் கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும், இன்று இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் நல்லெண்ண அடிப்படையில் குறித்த 86 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு…

Read More

ஜெயக்குமாரி விடுதலை; அமெரிக்கா வரவேற்பு

ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கை அரசு விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமாரியின் விடுதலையானது சிறுபான்மையினரை நோக்கி புதிய அரசாங்கத்தின் நல்லலெண்ண நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் மனித உரிமையை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வா ஆச்சிரமத்திலும் தங்க…

Read More

நேபாள நாட்டவருக்கு, இலங்கையில் மரண தண்டனை

நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நோபாளம் – லலித்புர பட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி குறித்த நபர் தனது உடம்பினுள் சுமார் 80 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கண்டியில் வைத்து கைது…

Read More

பாணந்துறையில் பெண்களின் மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்பு

பாணந்­துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயி­ரி­ழந்த இரண்டு சகோ­த­ரி­க­ளு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. வயோ­திபப் பெண்­க­ளான இரு­வரும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பின்னர் குறித்த தமது சகோ­த­ரிகள் வாழ்ந்த வீட்­டுக்கு வந்து பார்த்த போது சகோ­த­ரி­களின் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் காணப்­பட்­ட­தாக பெண்­களின் சகோ­தரர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார். இந்­த­நி­லையில் மரண விசா­ரணை இடம்­பெறும் வரை சம்­பவ இடத்தில் பொலிஸ்…

Read More

சிரியா மக்களை உலகம் கைவிட்டு விட்டது: பான் கி-மூன் வேதனை

உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு…

Read More

மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக முன்றலில் இந்த வரவேற்பு வைபவம் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நரேந்திர மோடியை வரவேற்றார். இந்திய பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன், மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இந்த உத்தியோகபூர்வ வைபவத்தின் பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

Read More

வட்டியில்லா வங்கிமுறை ஒன்றின் அவசியம்

பக்கீர் எம் இஸ்ஹாக் B.A கமியூனிசம் தோற்றுப்போனது. முதலாளித்துவம் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது. இஸ்லாம் ஒன்றே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமூகத்தில் இருந்து குறைக்க முடியும். அதனால்தான் இஸ்லாம் சக்காத் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. ஆனால் இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு கவலை தரும் விடயம். வாழ்க்கையை ஒரு மரதன் ஓட்டத்திற்கு ஒப்பிட முடியும். இங்கு விரும்பியவர்களல்லாம் அப்போட்டியில் கலந்து தன்னால் இயன்றளவு ஓடலாம். ஆனால் இங்கு 3 பேருக்கு 1ம் 2ம் 3ம்…

Read More

BBS ஒரு நிராகரிக்கப்பட்ட அமைப்பு: ஜனாதிபதி

இதன் போது இலங்கை முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தின் பின் சந்தோசமாக இருப்பதாக தான் அறிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அந்த சந்தோசம் நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் அவசியம் குறித்தும் விளக்கியதோடு ஜனாதிபதி பிரதிநிதிகள் குழுவில் அவரோடு பயணித்து குறித்த சந்திப்பின் விசேட அதிதியாக இணைந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் நட்பு பற்றியும் அவரிடம் அறிவுரை பெறுவது பற்றி நகைச்சுவையாகவும் அளவளாவியிருந்தார். சர்வதேச உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதில் குறிப்பாக ஐக்கிய…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுடனான அரசியல் காழ்ப்புணர்சியின் வெளிப்பாடே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு – ஹில்மி மகரூப்

கிண்ணியா ஜிப்ரி மதிப்புக்குறிய அமைச்சர் றிசாட் பதியுத்தீன் இலங்கை முஸ்லீம்களின் அதி சிறந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் அவர் ஏனைய தலைவர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கையும் வென்றவர். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராக இருந்து ஒரு சிறந்த தலைமைத்துவ நெறியாலுகையினால் உலகிலுள்ள 500 தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் நமது இலங்கை மண்ணுக்கும் தமிழ் பேசும் சமூகத்திக்கும் பெருமை தேடித்தந்தவர் இவ்வாராண ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச் சாட்டு சுமத்துவது என்பது மிகவும்…

Read More