இலங்கை மொபைல் பாவனையாளர்களுக்கு பொலிஸாரின் எச்சரிக்கை
அறிமுகமில்லாத இலக்கங்களில் வரும் தவறுதலான அழைப்புகளுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பிரதிப் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான லங்கா ரஞ்சினி இதனை தெரிவித்துள்ளார். தெரியாத இலக்கங்களிலிருந்து வரும் தவறுதலான அழைப்புகளுக்கு இளைஞர் யுவதிகள் திருப்பி அழைத்து பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளமை குறித்து அநேக முறைப்பாடுகள் நாளாந்தம் கிடைக்க பெறுகின்றன. அதிகளவிலான யுவதிகள் இவ்வாறான தவறுதலான அழைப்புகளுக்கு மீண்டும் அழைத்து தெரியாதவர்களுடன் பேசி…
