Headlines

யாழ். உஸ்மானியா கல்லூரி கட்டடம் அமைச்சர் றிஷாதினால் திறந்து வைப்பு (photos)

யாழ்ப்பாணத்தில் 1956ஆம் ஆண்டு ஒரு பாடசாலையின் தேவை உணரப்பட்டது அப்போது ஒன்று சேர்ந்த மக்கள் 1958 ஆம் கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தனர். 1963 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதினால் இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. 1990 அம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதரன சூழலினால் மக்கள் இடம்பெயர்ந்ததனால் இங்குள்ள மாணவர்களின் தொகை குறைந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பாடசாலை மீண்டும் இயங்க துவங்கியது.தற்போது இந்த பாடசாலை உயர் தர…

Read More

கடைசி அலுவலகத்தையும் மூடுகிறது யாஹூ

மற்ற உலகளாவிய இணைய நிறுவனங்களைப் போலவே யாஹூவும் சீன உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. அலுவலகம் மூடப்படுவதால் யாஹூவின் சீனப் பிரிவில் கிட்டத்தட்ட முந்நூறு பேர் வேலையிழக்கவுள்ளனர். சீனாவில் மின்னஞ்சல் சேவை வழங்குவதை 2013ஆம் ஆண்டே யாஹூ நிறுத்தியிருந்தது. தங்களது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கை இது என்றும், கூடுதலான ஒத்துழைப்புக்காகவும் புதுமையைப் புகுத்துவதற்காகவும் இது மேற்கொள்ளப்படுகிறது என்றும் யாஹூவின் அறிக்கை கூறுகிறது.

Read More

உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்க தெளிவான அறிக்கை வேண்டும்: ஜனாதிபதி செயலகம்

சிகிரிய ஓவியத்தில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சின்னத்தம்பி உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான தெளிவான  அறிக்கையொன்றை  சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

கடவுச்சீட்டு பெறுவதற்கு இனி கைவிரல் அடையாளம் தேவை

கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் போது விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் குடிவரவு  குடியகல்வு திணைக்கள சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை  அனுமதியளித்துள்ளது.  இதற்கிணங்கள 1948/ 20 ஆம் இலக்க குடிவரவு  குடியகல்வு சட்டத்தில் கடவுச்சீட்டுகளை  வழங்கும் போது விண்ணப்பதாரிகளின் கைவிரல் அடையாளங்களைப்  பெற்றுக்கொள்ளும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக  சமர்ப்பிப்பதற்காக சமாதானம் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கே அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போதைப்பொருள்…

Read More

முஸ்லிம்களை சித்தரவதை செய்தவர்களுக்கு சவுதி அரேபியாவை விமர்ச்சிக்கும் எந்த உரிமையும் இல்லை

சவுதி அரேபியாவின் முக்கிய அமீர்களில் ஒருவரான அமீர் துருக்கி பின் பைஸல் நேற்றைய தினம் C.N.N. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் மேற்கு உலகையும் சுவீடனையும் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். சிறை என்ற பெயரில் குவாண்டனாமோ மற்றும் அபுகரீப் போன்ற சித்திரவதை கூடங்களை நிறுவி பல நுற்றுக்கணக்கான முஸ்லிம்களை சித்தரவதை செய்த நாடுகளுக்கும் அந்த நாடுகளுக்கு துணையாக நின்ற நாடுகளுக்கும் இஸ்லாத்தையோ சவுதி அரேபியாவையோ விமர்ச்சிக்கும் எந்த உரிமையும் இல்லை என்றும் இஸ்லாம் மனித உரிமைகளை மதிக்கும் மார்க்கம்…

Read More

புதிய கட்டுப்பாட்டு விலை: பால்தேநீர் – 25/= தேனீர் – 10/= அப்பம் – 10/=

பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகிய மூன்றிற்கும் நுகர்வோர் அதிகார சபை விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி பால்தேனீர் 25 ரூபாவும் தேநீர் 10 ரூபாவுக்கும் அப்பம் 10 ரூபாவுக்கும் விற்கப்பட வேண்டுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

Read More

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புவிடத்தில்தீவு – பெரியமடு பாதை புனரமைப்பு பணிகள் நிறைவுறும் – அமைச்சர் றிஷாத் உறுதி (photos)

 மன்னார் மாவட்டத்தின் மாந்தைமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மஹலிக்குளம் – பள்ளமடு வீதி, விடத்தில்தீவு சந்தியிலிருந்து பெரியமடு வரைக்குமான 12 கிலோ மீட்டர் பாதை காபர்ட் பாதை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியான 450 மில்லியன் ரூபா நிதியில் இந்த பாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது. கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முயற்சியினால் இந்த நிதி பெறப்பட்டது. இந்த நிகழ்வு வடமாகாண போக்குவரத்து,மற்றும் வர்த்தக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது….

Read More

ஜ.ரீ.என் மற்றும் வசந்தம் தொலைக்காட்சிகள் கடந்த அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்டுவந்தது

அஸ்ரப் ஏ சமத் ஜ.ரீ.என். மற்றும் வசந்தம் தொலைக்காட்சி செய்திகள் கடந்த முன்று மாதத்திற்குள் முதல் தர தொலைக்காட்சி செய்தி சேவை வழங்கும் நிலைக்கு வந்துள்ளது. என ஜ.ரீ.என் செய்திப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் மாவலகே தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள சுயாதீன தொலைக்காட்சி மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பிரதேச செய்தி ஊடகவியலாளர்கள் 300 பேரை அழைத்து நடாத்திய பயிற்சிப் பட்டரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வு கொழும்பு ஹெக்டர் கொப்பேக் கடுவ கேட்போர் நிலையத்தில்…

Read More

யாழ் பரச்சேரி முஸ்லிம் கிராமத்திற்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

பாறுக் சிகான் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த அமைச்சர் றிஷாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்த வேளை அங்குள்ள முஸ்லிம் மக்களின் தேவைகளை கேட்டறிந்தார். இதன்போது அங்குள்ள பரச்சேரி கிராமத்தில் தற்காலிகமாக குடியேறிய மக்களை சந்தித்தார். அவ்வேளை, அம்மக்கள் தங்கள் பிரச்சினைகளை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். உடனடியாக அம்மக்களின் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வினை பெற்றுக்கொடுத்தார். அடுத்து கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பரச்சேரி கிராமத்தில் உள்ள…

Read More

1000 வருடம் பழமையான மோதிரத்தில் அல்லாஹ் என்ற அரபு எழுத்து

கண்டெடுக்கப்பட்டிருக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மோதிரம் ஒன்றின் மூலம் ஸ்கண்டினேவியர்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையில் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. சுவீடன் நாட்டில் 9 ஆம் நூற்றாண்டு பெண் ஒருவரது கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோதிரம் ஒன்றில் ‘அல்லாஹ்வுக்காக’ என்ற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வைகிங் காலத்து வர்த்தக மையமாக இருந்த ஸ்டொக்ஹோமுக்கு மேற்காக 15.5 மைல் தொலைவில் இருக்கும் மிர்கா பகுதியில் 1872-1895 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே வர்ண கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரம்…

Read More

பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நிகழ்வு!

இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு (SLPAFA) கழகம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை பாகிஸ்தான் சமூகத்தினைச்சார்ந்த பல மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பங்குபற்றுனர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் கேள்விகள் தொடுக்கப்பட்டு போட்டி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கேட்கப்படும் கேள்விகள் இலங்கை…

Read More

வெயில் அதிகமானால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிடும்:எய்ம்ஸ்

மிக வேகமாக மனிதர்களைப் பலி கொண்டு வரும் பன்றிக் காய்ச்சல் நோய் வெயில் அதிகமானால் கட்டுக்குள் வந்துவிடும் என்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் மிக வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி, மனித உயிர்களை அதே வேகத்தில் பலி கொண்டு வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 18 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர் என்றும், இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர் என்றும் சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்றிக்…

Read More