Headlines

சீமெந்து மூடையின் விலை 870 ரூபா

சீமெந்து மூடையொன்றின் அதிகப்பட்ச விற்பனை விலை 870 ரூபாவாகும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

“ஐரோப்பாவில் ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளி கட்டப்படுகிறது.”

ஐரோப்பாவில் ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு  சர்ச்கள் விற்கப்படும் அதேவேளை, ஒவ்வொரு நூறு நாட்களிலும் ஒரு பள்ளிவாயல் கட்டப்படுவதாக ஐரோப்பிய நாடுகளில் அழைப்புப் பணியில் ஈடுபடும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல தாஇயாகிய “அஷ்ஷெய்க் முஹம்மத் அல்அறீபி” தெரிவித்துள்ளார். கலாநிதி முகம்மத் அல்அறீபி அவர்கள் இக்கருத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : “ஐரோப்பாவை நன்கு உற்றுநோக்கும் போது புலப்படுகிற விடயம் என்னவெனில், அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று அல்லது நான்கு சர்சுகள் விற்கப்படுகின்றன….

Read More

சவூதி அரேபியாவில் கடந்த 5 மாதங்களில் – 3 லட்சம் பேர் வெளியேற்றம்

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளி விபரம் தொழிலாளர் மற்றும்   ஒழுங்குமுறைகளை கிட்டத்தட்ட 300,000 மீறுபவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் வெளியேற்றம் சவுதி அதிகாரிகள் மீறுபவர்கள் அவுட் பறிப்பு, நாடு முழுவதும் பிரச்சாரம் தொடர்ந்தது என “2,000 சட்டவிரோத ஹோலி சராசரியாக ஒவ்வொரு நாளும் இராச்சியம் வெளியே அனுப்பப்படும்,” அமைச்சின் கூறினார். தகவல் பார்டர் காவலர்களை இன்னும் 84 சதவீத தெற்கு எல்லைகள் மூலம் வருகிறது, சட்டவிரோதமாக இராச்சியம் நுழைய முயன்ற 900,000 ஊடுருவல்காரர்கள் கைது…

Read More

முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை மே மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விளக்கமறிக்குமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவள ஆகிய நீதியரசர்கள் கொண்ட குழுவினால்  இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. தன்னுடைய கணவரான  ஏ.எச்.எம் அஷ்ரப்…

Read More

நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை மேம்படுத்த விசேட திட்டம்

நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்களின் தரத்தை தேசிய தரத்திலிருந்த சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடனான விசேட செயற்றிட்டமொன்று இன்று (23)  உல்லாசத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் பம்பரகல பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது கடந்து ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட மலர் செய்கை முயற்சியாளர்களின் கூட்டுறவுச்சங்கத்தினரது விற்பனை நிலையமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.கடந்த அரசின் போது 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்திற்காக தற்போது 80 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இலங்கை…

Read More

உலக காசநோய் எதிர்ப்புத் தினம் இன்று!

உலக காசநோய் தினம் இன்று ஆகும். இம்முறை உலக காசநோய் தினத்தின் தொனிப்பொருள் அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அடையாளங்காண்போம்- சிகிச்சையளிப்போம்- அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம் என்பதாகும். 1884ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி டொக்டர் ரொபட் கொவ் காசநோயை ஏற்படுத்தும் பக்டீரியா  Mycobacterium tuberculosis என அடையாளங்கண்மையை கௌரவப்படுத்தும் வகையில் இத்தினம் உலக காசநோய் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காசநோய் பக்டீரியா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். உலக சனத்தொகையில் 9 மில்லியன்  பேர்…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் இங்கிலாந்து மாணவர்கள்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து உள்ளதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 9 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சிரியா சென்று ஐ.எஸ். நடத்தும் ஆஸ்பத்திரிகளில் பணிபுரிந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வயதுக்கு உட்பட்ட இந்த மாணவர்களில் 4 பேர்…

Read More

ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை: நொறுக்கபட்டது வேன்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் உள்ள ஒந்தாச்சிமடம் சந்தியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி வேன் பிரதேச மக்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒந்தாச்சிமடத்தைச் சேர்ந்த தங்க ஆபரண தொழில் செய்யும் இரு பிள்ளைகளிக் தந்தையான சின்னத்தம்பி கமலசேகரம் வயது (42) என்பவரே உயிரிழந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். உயிரிழந்தவர் துவிச்சக்கர வண்டியில் ஊர் வீதியிலிருந்து…

Read More

தாத்தா வீட்டில் கொடுமை: வழி தவறி வந்த சிறுமி

– க.கிஷாந்தன் – அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதியில் வைத்து வழி தவறி வந்த 12 வயதுடைய சிறுமியை மீட்ட தோட்ட மக்கள், அவரை அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி பகுதியைச் சேர்ந்த ஆர்.சிறிதேவி என்ற சிறுமியே  இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். இன்ஜெஸ்ட்ரி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி, வெளிஓயாவில் அமைந்துள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். தாத்தாவின் வீட்டில் தன்னை துன்புறுத்துவதாகவும் அங்கு தனக்கு சிரமமான வேலைகளை வழங்குவதாகவும் அதன் காரணமாகவே தாத்தாவின்…

Read More

நான்கு வகைகளிலான கறிகளுடன் இன்றுமுதல் 50 ரூபாவிற்கு விற்கப்படும் சோற்றுப் பர்சல்கள்

நான்கு வகைகளிலான கறிகளுடன் 50 ரூபாவிற்கு சோற்றுப் பொதிகள் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று முதல் முதல் 50 ரூபாவிற்கு சோற்றுப் பொதிகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டமாக கொழும்பு நகரில் 15000 சோற்றுப் பொதிகள் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. 50 ரூபாவிற்கு…

Read More

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள வாகனம் 5555

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனத்தின் இலக்கமானது இதுவரை இலங்கை வீதிகளில் பயணித்த வாகனங்களில் காணப்படாத அடையாளத்துடன் கூடிய இலக்கமாக அது அமைந்துள்ளது. வாகனத்தின் முன் பகுதியில் 5 நட்சத்திரங்களும் பின் பகுதியில் 5 நட்சத்திரங்களும் காணப்படுகின்றன. பீல்ட் மார்ஷல் ஒருவரின் வாகனம் செல்கிறது என்பதை ஏனையோர் அறிந்து கொள்ளும் வகையில் விசேட அடையாளமாக இந்த நட்சத்திரங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. எஸ். 400 என்ற பென்ஸ் கார் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது ஐப்ரைட்…

Read More

முஹம்மது நபியை முன்னறிவிப்பு செய்த பைபிள் கண்டுபிடிப்பு

இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு கிறிஸ்து [ஈஸா நபி ] முன்னறிவிப்பு செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டு எடுக்கப்பட்டது. இறுதி தூதரான முஹம்மது நபியின் வருகையை குறித்தும் ,இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம் ,தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துகளுடன் முரண்படுவதால் கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது .என்று துருக்கியின் கலாச்சார சுற்றுலா துறை அமைச்சர் உர்துக் ரூல்குனாய் தெரிவித்தார்…

Read More