Headlines

கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம். ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப்…

Read More

சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியும்

‘தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியாது. இது நீண்ட காலமாகவுள்ள நடைமுறை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினர் ஒருவர் வருவதையும் சிலர் விரும்பவில்லை. நாம் ஒன்றுபட்டு சிறுபான்மையினர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம்’ என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேற்றுக் காலை (24) திறந்து வைத்தார். அமைச்சருடன்…

Read More

உலகில் விலை உயர்ந்த ஆடம்பர தங்க கார்: இலங்கை பெறுமதி 98 கோடி..!

ஆடம்பரத்துக்கு பெயர்போன டுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, அதை வீதியில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர். வெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ஆம் ஆண்டு டுபாய் கார் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த ‘லம்போர்கினி…

Read More

ஜனாதிபதி இன்று சீனா விஜயம்!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) சீனா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இரு அரச தலைவர்களும் கவனம் செலுத்தவுள்ளனர்.

Read More

19ஆம் திருத்தச்சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதேநேரம், ஆறு வருடகாலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தத்துவங்கள், கடமைகள், பணிகள் என்ற உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக இருக்க வேண்டும். மதம் சார், இனம் சார், ஒற்றுமை பேணப்படுதலை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கம் மற்றும்…

Read More

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு – கருப்பு பெட்டி கிடைத்தது

ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானது. 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான…

Read More

அல்லாஹ்வினை மீறி உலகில் எதுவும் நடக்காது என்றால் ஏன் உலகில் இத்தனை கேவலங்கள் அரங்கேறுகிறது..?? (கேள்விக்கு பதில்)

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அல்லாஹ் குர் ஆனில் தான் நாடியதைத் தவிர வேறு எதுவும் உலகில் நடக்காது என்ற கருத்துப்பட பல இடங்களில் குறிப்பிடுகிறான்.அவ்வாறானால் உலகில் அனாச்சாரங்கள் அரங்கேறாமல் தடுத்து உலகத்தினை ஒரு சீராக வைத்திருக்கலாமே என்ற வினா எழலாம்.வெளிப் பார்வையில் பார்க்கும் போது இது சரி போன்று விளங்கினாலும் நன்கு ஆராய்ந்து பார்க்கும் போது இதற்கான தெளிவினை நாம் விளங்கிக்கொள்ள முடியும். அல்லாஹ் மனிதனைப் படைத்து அவனுக்கு நல்லது கெட்டது எது என பகுத்துணரும்…

Read More

பொதுபல சேனாவின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் – முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் கண்டனம்

முகம்மட் பஹாத் ஒரு சமூகம் குறித்து மிக மோஷமான வாசகங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும். பொதுபல சேனா இன்று முஸ்லிம்களைக் குறிக்க பயன்படுத்தியுள்ள வாசகங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் எமது தெரிவித்தார். இன்று பொதுபல சேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம்களை குறிப்பதற்கு கீழ்த்தரமான சொற் பிரயோகத்தை அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பன்றி என்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்ட ஒரு விலங்காகும். அத்துடன், இழிவான ஒரு விலங்காகவும் உள்ளது. இந்த சொற்பிரயோகத்தை…

Read More

கட்டாரில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்களை உயர்த்துமாறு ஜனாதிபதி மன்னரிடம் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த கட்டார் நாட்டு அமீர் இலங்கையில் மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருந்ததுடன் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட பின்னர் நாடு திரும்பினார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் ஆகியோருக் கிடையில் விசேட சந்திப்பு…

Read More

ஜீஎஸ்பி வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா கடந்த காலத்தில் இலங்கைக்கு கிடைக்காமல் போன ஜீஎஸ்பி வரிச் சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இந்த சலுகையினை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.ஒன்றியத்தின் இலங்கை்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

ஹிக்கடுவ ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.45 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் மனோஜ் மென்டிஸ் உயிரிழந்தார். அவருடன் இருந்த இருவர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மோப்ப நாய் கொண்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ள நிலையில் சந்தேகநபர்கள் குறித்த எவ்வித…

Read More

கியூபாவில் முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்

கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது. திருடப்பட்ட முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். இதையடுத்து மோசடி, கையாடல், வங்கியில் பொய் கையெழுத்து, வணிக போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு குற்றப்பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு…

Read More