Headlines

ஒருபோதும் அரசு சமஷ்டியை வழங்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒருபோதும் சமஷ்டி அடிப்படையிலான நிர்வாக முறையொன்றை வழங்காது என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர் நியமிப்பு

கோட்டை தேர்தல் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக ஆர்.ஏ.டி ஜனக ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனக ரணவக்க தனது நியமனக் கடிதத்தினை நேற்று (22) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Read More

இம்முறை எவருக்கும், எந்த மன்னிப்பும் கிடையாது

காலி, சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சியில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திசாநாயக்க, ‘இதற்கு முன்னரும், கட்சிக்கு…

Read More

அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாணசபை அமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திக்கவுள்ளார். மேலும், இந்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக அனைத்து மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படவுள்ளதோடு, மேதினத்தில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read More

மஹிந்தவை மத்திய குழு கட்டுப்படுத்த முடியாது.!

ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் மத்­திய குழு எடுக்கும் தீர்­மா­னங்கள் கட்­சியின் சகல பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தும் தன்மை கொண்­டது. எனினும் மஹிந்த ராஜ­பக் ஷ இந்த நாட்டின் முன்னாள் ஜனா­தி­ப­தி­யாவார். எனவே ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வழி­ந­டத்­து­வது போன்று அவரை வழிநடத்த முடி­யாது. அவரை இரா­ஜ­தந்­திர ரீதியில் அணுகவேண்டும். ஆகவே அவ­ரது விடயத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிரத்­தி­யே­க­மான முறையில் கையாள்வார் என திறன் விருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று (18) காலை…

Read More

சு.க எம்.பி.க்கள் தனித்துப் பேச்சு

தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதித் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, இவ்வாரத்தில் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிரணியின் கொள்கை மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நடைமுறை நடைமுறைச் செயற்றிட்டங்கள் தொடர்பில், இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என்று சு.க.வின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். தாங்கள் தனித்து மேதின ஊர்வலமொன்றை நடத்தப்போவதாக, கூட்டு எதிரணியினர் கடந்த…

Read More

சு.கவின் மே தின கூட்டம் காலியில்

– வி.நிரோஷினி – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

கூக்குரல் இடுவதனால் கட்சியை வீழ்த்த முடியாது: பைசர் முஸ்தபா

கூக்குரல் இடுவதனால் கட்சியை வீழ்த்த முடியாது என உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்று கூக்குரல் இடுவதனால் கட்சியை தோற்கடித்துவிட முடியாது. சில திட்டமிட்டு இவ்வாறு கூக்குரல் இடுவதனால் கட்சியை உள ரீதியாக…

Read More

யாப்புக்கு அப்பால் எவருக்கும் முன்னுரிமை இல்லை

– எஸ்.ரவிசான் – கட்சியின்கொள்கைகள் உட்பட யாப்புக்கு அப்பால்சென்று எந்தவொறு தரப்பினருக்கும் முன்னுரிமை வழங்க கூடாது எனவும் கட்சியினை நேசிக்கும் ஒருவரே உண்மையான மக்கள் பிரதிநிதியாக போற்றப்படுவார் எனவும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னால் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.ம.சு.முன்னணியை மகிந்த அமரவீர பலப்படுத்துவார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால…

Read More

பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்தும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்

அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும்…

Read More

“கூட்டு எதிர்க்கட்சியில் பங்கேற்க SLFP க்கு அனுமதி கிடையாது”

கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றையும் கூட்டமொன்றையும் நடாத்த உள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே துமிந்த திஸ்ஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த கூட்டத்திலும்…

Read More