Headlines

பந்துலவின் இடத்திற்கு காமினி நியமனம்

ஸ்ரீ லங்கா சுகந்திர கட்சியின் ஹோமாகம தொகுதிக்கான புதிய தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தை அமைச்சர் காமினி திலக்கசிறி இன்று (22) பெற்றுகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சு.கா மாநாடன்று மஹிந்த, இலங்கையில் இல்லை?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியன்று, குருநாகலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அக்கட்சியினரால் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவரும் அவ்வழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு, மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினருடன், எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்னர், இத்தாலி செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது. அங்கு செல்லும் அவர்கள், எதிர்வரும் 4ஆம் திகதியன்று, இத்தாலியிலுள்ள, சிங்கள…

Read More

பதவி விலகுவதாக டலஸ் அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். vk

Read More

சுதந்திர கட்சி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார்…

Read More

சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். மிரிஹானையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று, கட்சியின் மூத்த உப தலைவரும் தொழில் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன இந்த அழைப்பிதழை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்!

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கும்   51 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி,  நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும். இலங்கையில் , ஒரு…

Read More

அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவசர கலந்துரையாடல்

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று  (8) பிற்பகல் ஈடுபடவுள்ளனர். குறித்த திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரியதர்ஷன யாப்பா, சரத் அமுனுகம, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன உள்ளிட்டவர்கள் இந்த குழுவில் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

சுதந்திர கட்சியின் மத்தியக்குழு சந்திப்பு இன்று

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் 65 ஆவது  ஆண்டுநிறைவு மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தவைவர் சாந்த பண்டார தெரிவித்தார். எவ்வாறாயினும் கூட்டு எதிர்கட்சியின் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த…

Read More

ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை…

Read More

சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று கொழும்பில்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று (18) மாலை கொழும்பில் ஒன்று கூட உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ள விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மாநாடுகள் குறித்து இதில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது.

Read More

கட்சித் தலைமையை விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையையும் கட்சியையும் விமர்சிப்போருக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்ற தீர்மானம் உறுதியாக எடுக்கப்பட்டுள்ளது  என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர  தெரிவித்தார். தேர்தலில் போட்டியிட இளையோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதில் போட்டியிடுவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More