Headlines

எனது மகன் அரசியலில் ஈடுபட மாட்டார் – சந்திரிக்கா

தனது புதல்வரான விமுக்தி குமாரதுங்க எந்த காலத்திலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி, கட்சியின் தலைமையகத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் யாரிடமும் பதவிகளை கேட்க மாட்டேன். எனது மகன் இங்கு அரசியலில் ஈடுபட வரமாட்டார். குடும்ப ஆட்சி நாட்டில் தொடர்ந்தும்…

Read More

“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…

Read More

26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர்களுக்கு  நியமனம் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Read More

தனித்து செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக   பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற…

Read More

என்னை இலகுவில் விரட்ட முடியாது – மஹிந்த

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் இன்னுமிருக்கின்றேன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட்டு விரட்டுவதற்கு முயற்சித்தாலும், என்னை இலகுவில் விரட்டிவிட முடியாது’ என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாக அறையில் நிறுவப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர், நேற்று ஆஜரானார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்காக சுயாதீன…

Read More

மஹிந்தவுக்கு மனிதாபிமானமென்றால் என்னவென்றே தெரியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை…

Read More

சுந்திரக் கட்சி துண்டாடப் படுவதால் நாட்டிற்கே பாதிப்பு

– ஷம்ஸ் பாஹிம்  – சுதந்திரக் கட்சியை உடைக்கும் பாவகாரியத்துக்கு ஜ.தே.க ஒருபோதும் துணைபோகாது என களுத்துறை மாவட்ட ஜ.தே.க பிரதி அமைச்சர் அஜித் பி பொரேரா தெரிவித்தார். ஆனால், நாட்டுக்கு எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பரவாயில்லை கட்சியைத் துண்டாடியாவது தமக்கு எதிரான குற்றங்களை மறைக்க ஒரு தரப்பினர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை பகுதியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் சுதந்திரக்கட்சி பிளவு குறித்து கருத்துத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சி துண்டாடப்படுவது ஜனநாயக்திற்கு அச்சுறுத்தலாகும்.ஜனாதபதி…

Read More

மீளவும் விண்ணப்பங்கள் கோரும் சுதந்திரக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை மீளவும் கோருவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பூர்த்தி செய்திருந்தது.தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 14,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் ஒரு தொகுதியினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு  ஆதரவாக உருவாக்கப்படும் புதிய அரசியல் கட்சியில் போட்டியிடக் கூடும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு  தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

Read More

எனது பதவியை பறித்துக்கொண்டார்: ராஜபக்ஸ

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தன்னிடமிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்துக்கொண்டதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நீர்கொழும்பு ,கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் ஒருபோதும் சுதந்திர கட்சியின் தலைமை பதவியை தானம் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தனது தலைவர் பதவியை பறித்துக் கொண்டார் என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சுதந்திரக்கட்சியின் விசேட செயற்குழுக்கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவின் விசேட கூட்டம் இன்று (12) நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இன்று பிற்­பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார். நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள், கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக இந்த கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட உள்­ளது. மேலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பிலும் மத்­திய செயற்­குழு இந்த கூட்­டத்தில் இறுதி முடிவை…

Read More

சுதந்திரக் கட்சியை நான் விரும்பி மைத்திரியிடம் ஒப்படைக்கவில்லை: மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கைச்சின்னமும் வெறும் கட்டிடம் அல்ல எனவும் மக்களே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் தான் அந்த இடத்திலேயே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பில் போது அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏன் ஒப்படைத்தீர்கள் என சிலர் கேட்கின்றனர். உண்மையில் நான் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர்…

Read More

சர்வாதிகாரி போன்று செயற்படத் தயாரில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என…

Read More