ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி: அ.இ.ம.கா.
முஸ்லிம் பெண்களின் மார்க்க ரீதியான ஆடைகளான புர்காஃநிகாப் போன்ற உடைகளை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர் உள்நோக்கம் கொண்டு தடைசெய்ய மேற்கொண்ட முயற்சியை தக்க சமயத்தில் தடுத்து நிறுத்திய துணிவுமிக்க கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நன்றி கூறுவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெருமைகொள்கிறது. மதத்தைப் பின்பற்றும் உரிமையும்- மதக் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் உரிமையும் எமது யாப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசியல் சட்ட அடிப்படை உரிமையை பாதுகாத்து, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்த…
