Headlines

அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்

அரசியல் அமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் மாதத்திற்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு தொடர்பான நாடாளுமன்ற செயற்குழு, புதிய அரசியல் அமைப்பு குறித்த ஆரம்பக் கொள்கைகள் அனைத்து குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்படி, இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய…

Read More

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை

பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்களின் செயற்பாடு குறித்து பொதுமக்கள் விமர்சனங்களை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தகுந்த வார்த்தை பிரயோகங்களை உபயோகப்படுத்தி பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அத்துடன் பாராளுமன்ற ஒழுக்கங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளமை…

Read More

தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று பரிசீலனை செய்யப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் வாதிடுகையில், தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்…

Read More

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அன்சார் விவகாரம்: பிரதமர் கண்டனம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் (26) பாராளுமன்றுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read More

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள்… பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத் கோரிக்கை… காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு ஒன்றை வழங்கி அவர்களின் விமோசனத்துக்காக நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை (25/08/2016) தெரிவித்தார். இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, காணாமல் போனோர் தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள…

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: நாடாளுமன்றில் விசேட பிரேரணை

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி நடத்தப்படுகின்றமைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று (25) பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டு எதிர்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. அதன் ஒரு கட்டமே அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டலஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டமை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்க கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

Read More

எம்.பி.க்களுக்கான ஒழுக்கக் கோவை!

தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கி­யுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஒழுக்கக் கோவை பற்­றிய விப­ரங்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இந்த ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக அர­சாங்­கத்தின் சிரேஷ்ட பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார். ஒழுக்கக்கோவையை அமுல்­ப­டுத்­து­வது குறித்து கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இந்த வாரம் பேசப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது இந்த ஒழுக்­கக்­கோ­வையில் சில திருத்­தங்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்­தி­ருந்­தனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அர­சி­யல்­வா­திகள் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும் என்­ப­தனை…

Read More

தகவலறியும் ஆணைக்குழு ; இம்மாத இறுதிக்குள் உறுப்பினர்கள் நியமனம்

-ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – தகவலறியும் ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு  ஆணைக்குழுவை நிறுவப்பட வேண்டுமென அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று   பிற்பகல் அரசியலமைப்பு பேரவை கூடியது. இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, சுயாதீன ஆணைக்குழுக்களின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் தகவலறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து அரசியல் அமைப்பு பேரவைக் கூட்டத்தொடரில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக தகவலறியும் உரிமைச்…

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழி காட்டலில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிய பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் நாம் வெற்றிகண்டு வருவதோடு,  நாட்டின் பல பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புற்று இருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, சம்மாந்துறை, மஹாஓயா ஆகிய இடங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும்,…

Read More

நாடாளுமன்றில் இன்று விவாதம்!

நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. உத்தேச நிதி முகாமைத்துவ திருத்தச் சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் செய்யப்படவுள்ளது. 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய இந்த திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வற் வரி அதிகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான தீர்ப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பற்றி சபாநாயகர் இன்று (9) நாடாளுமன்றில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More