Headlines

கோப் குழுவின் அறிக்கை விரைவில் நாடாளுமன்றில்

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்குழு) அடுத்த மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்க உள்ளது. நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள அறிக்கை தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவுக்குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 26 நிறுவனங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இந்த அறிக்கை மூலம் நாடாளுமன்றத்திற்கு தகவல்கள் முன்வைக்கப்படும். மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உட்பட 26 அரச நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் சம்பந்தமாக நடந்த முறைகேடுகளை கோப் குழு…

Read More

உயர்நீதிமன்ற அழைப்பாணை குறித்து சபாநாயகரே தீர்ப்பு வழங்கவேண்டும்.!

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தி தாக்கல் செய்யப்­பட்ட மனு­வொன்றின் கார­ண­மாக உயர் நீதி­மன்­றத்­தினால் தனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்துசபா­நா­ய­க­ரினால் தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமை­வான தீர்­மா­ன­மொன்றும் பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் அந்த தீர்­மா­னத்தை நீதி­மன்­றத்தின் கேள்­விக்கு உட்­ப­டுத்­து­வது சிறப்­பு­ரிமை மீற­லா கும். ஆகவே சபா­நா­யகர் இம்­மனு தொடர்­பாக தீர்ப்­பொன்றை உயர் நீதி­மன்­றத்­திற்கு அறி­விக்க வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­க­ிர­ம­சிங்க கோரிக்கை விடுத்தார்….

Read More

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…

Read More

இயற்கை அனர்த்தம் தொடர்பில் இன்று விசேட பாரா­ளு­மன்ற அமர்வு

பாரா­ளு­மன்­றத்தின் விசேட அமர்வு இன்று புதன்­கி­ழமை 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நடை­பெ­று­கி­றது. நாட்டில் ஏற்­பட்ட மழை­ வெள் ளம், மண்­ச­ரிவு மற்றும் இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை­மைகள் தொடர்­பா­கவே இன்­றைய விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இடம்­பெ­று­கி­றது. கடந்த வாரம் பாரா­ளு­மன்ற அமர்வின் இறுதி தின­மான 20 ஆம் திகதி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட எம்.பியும் மஹிந்த அணி ஆத­ர­வா­ள­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை தொடர்­பாக விசேட ஒரு…

Read More

 ‘சண்டியர்களை போல சத்தம் போட முடியாது’

55 மில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்புத்தொகை தொடர்பிலான பிரேரணை, நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘சபையில் சத்தம் போட்டு, சண்டியர்களைப் போல செயற்பட முடியாது’ என்று கடுந்தொனியில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்;று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை தினப்பணிகளுக்கு நகர்த்தப்பட்டது.

Read More

வெள்ள அனர்த்தம் தீவிரம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் ஏற்­பட்ட அனர்த்த நிலை­மைகள் தொடர்­பாக மக்கள் பிர­தி­நி­திகள் கவனம் செலுத்த வேண்­டி­யதன் கார­ண­மாக நேற்று (19) வியா­ழக்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் நண்­பகல் 12.10 மணி­யுடன் ஒத்தி வைக்­கப்­பட்­டன.

Read More

கரு ஜயசூரிய அனுதாபம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால்…

Read More

மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியவன்னா வாவியின் நீர்மட்டம் தற்போதைக்கு 1.8 மீட்டரை அண்மித்துள்ளது. இன்னும் ஓரிரு அடிகள் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினுள் முற்றாக வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் நாடாளுமன்ற மைதானம் அதனை அண்மித்த பாதைகள்…

Read More

தகவல் அறியும் உரிமை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நடாத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. இந்த கருத்தரங்கு கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிதலையும் அறிவையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்…

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை : 17, 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் விவாதம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் கடந்த ஆட்சிக் காலத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக 17, 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறும். நிறுவனத்தின் தற்போதைய கடன் காரணமாக அதை கூட்டிணைந்த நிறுவனமாக மாற்ற அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

Read More

சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.

 ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார். எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள்…

Read More

அமர்வுகளுக்கு செல்லாத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை!

நாடாளுமன்ற அமர்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ப்பதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார் கடந்த வியாழக்கிழமையன்று அரசாங்கத்தின் பிரேரணை ஒன்றின் வாக்கெடுப்பின்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரவின்மையால் குழப்பநிலை ஏற்பட்டது இது மக்களின் ஆணையை மீறும் செயல் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக சரத் வீரசூரிய…

Read More