Headlines

வரட்சி நிலை தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும்

நாட்டின் பல பிரதேசங்களிலும் காணப்படுகின்ற வரட்சியினை கருத்திற்கொண்டுஅவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இந்த வரட்சி நிலை தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும்கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். கடும் வரட்சியினால் மக்கள் குடிநீர் இன்றி அவதியுறுவதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக விவசாயிகள் அதிகம் இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவேவிவசாயிகளுக்கு நிவாரண நிவர்த்திக்காக அவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறும்பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

ஒன்றிணைந்த எதிரணியின் 12 பேருக்கு சட்டப் பிரச்சினை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவதில், சட்டப் பிரச்சினை உள்ளதால், தான் உள்ளிட்ட 12 பேர், அக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக முடியாதுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பில், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகக் கூறிய மஹிந்தானந்த எம்.பி, எதிர்காலத்தில், ஒருமித்த முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து தங்களது விருப்பத்தின் பேரில் விலகுபவர்களது கட்சி உறுப்புரிமையும் நீக்கப்படும் தீர்மானமொன்றும் நடைமுறைக்கு வரும்…

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: நாடாளுமன்றில் விசேட பிரேரணை

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி நடத்தப்படுகின்றமைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று (25) பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டு எதிர்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. அதன் ஒரு கட்டமே அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டலஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டமை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொரள்ளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்க கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

Read More

சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவோம் – கூட்டு எதிர்க்கட்சி

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகிக்கொள்வர் என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களும் அமைப்பாளர் பதவிகளை விட்டு விலகிக் கொள்ள உள்ளனர். ராஜினாமா கடிதங்கள் வெகு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமது குழுவினை சுயாதீன ஓர் குழுவாக…

Read More

வாய்ப்பை தவறவிட்ட ஒன்றிணைந்த எதிரணி

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகச் சட்டமூலத்தில், ஒன்றிணைந்த எதிரணியினரால் முன்வைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திருத்தங்களுக்கமைய, மேற்படி சட்டமூலத்தின் 7ஆவது பக்கத்திலுள்ள 11ஆவது பந்தியின் 21ஆவது வரி முதல் 29ஆவது வரி வரையான பந்தி நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், நீதிமன்ற உத்தரவின்றி, இராணுவ முகாமொன்றுக்கோ அல்லது வேறோர் நிலையத்துக்குள்ளோ நுழைவதற்காக அலுவலகத்துக்கிருந்த அனுமதி, தேசிய அல்லது சர்வதேச ரீதியில் நிதிப்…

Read More

மஹிந்த தலை­மையில் விசேட தீர்­மானம்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­ப­தியின் நிபந்­த­னை­க­ளையோ கட்­சியின் கொள்­கை­க­ளையோ மீறி செயற்­படவில்லை. எனவே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையை எதிர்கொள்­ளவும் எதிர்கால நட­வ­டிக்கை தொடர்பில் கலந்­து­ரை­யா­டவும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் கூட்டு எதிர்க்கட்­சி யின் அனைத்து உறுப்­பி­னர்­களும் வெள்­ளிக்­கி­ழமை விசேட சந்­திப்பை நடத்த உள்­ளனர். ஆறு நாள் விஜ­யத்தை மேற்­கொண்டு தென்­கொ­ரியா சென்­றுள்ள மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு நாளை வியா­ழக்­கி­ழமை நாடு திரும்­பு­கின்­றது. தென்­கொ­ரி­யாவில் வாழும் இலங்­கை­யர்­களை சந்­தித்து நாட்டில் தற்­போ­துள்ள…

Read More

பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றனர்

பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் கொழும்பை அடைந்த போது அதில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றிருந்தனர். இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதனையே மக்கள் ஒருமித்த குரலில் இவ்வாறு வலியுறுத்துகின்றனர். ஜெனீவாவிற்கு சென்று வெளிவிவகார அமைச்சர் இந்த நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்….

Read More

மஹிந்த அணியினர்க்கு மைதானம் மறுப்பு

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதிநாளான இன்று பாதயாத்திரை கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுக்கூட்டத்துக்கான மைதானம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. காலை ஒன்பது மணியளவில் கிரிபத்கொடை நகரில் இருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சி முன்னர் தீர்மானித்திருந்தது. அதற்காக வாசுதேவ நாணயக்கார பெயரில் கொழும்பு ஹைட்பார்க் மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஹைட்பார்க்…

Read More

“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”

“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை. இந்த பாதயாத்திரையின் நோக்கம்  மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர். ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்….

Read More

11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார். குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.

Read More

கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!

கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள் இன்று காலை கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று மாதத்தின் முதல் நாள், வாரத்திலும் முதல் நாள். கொழும்பு தலைநகரம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் இன்று மக்கள் மத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கின்றது. இந்த பாதயாத்திரை கொழும்பை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் கொழும்பில் இவர்கள் எங்கு…

Read More

சமாதியை கடக்கும் போது சத்தமில்லை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Read More