Headlines

விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான  வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm

Read More

பாத யாத்திரை: எதைப் பிடுங்கப் போகிறீர்? (Article)

-எம்.ஐ.முபாறக் – நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி, அதிகாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமான காரியமாகும். எதையாவது செய்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்அதே பழைய ஊழல் ஆட்சியை நிறுவி பழைய சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவே இருக்கின்றனர். தங்கள்மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தும்கூட-அதற்கான ஆதாரங்கள் இந்த அரசிடம் உள்ளபோதிலும் கூட, இந்த அரசை ஊழல், மோசடிமிக்க அரசாகக்…

Read More

பாதயாத்திரையின் இரண்டாம் நாள் ஆரம்பமானது!

மகிந்த ஆதரவு அணியினரின் கொழும்பு நோக்கிய பேரணியின் இரண்டாம் நாள் இன்று காலை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகியது. இதேவேளை, குறித்த பாதயாத்திரை இன்றைய தினம் நெலும்தெனிய வரை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த பேரணி பேராதெனியவில் இருந்து மாவனல்லை கனேதென்ன பிரதேசம் வரையில் பேரணியாக சென்றது. “மக்கள் போராட்டம்” எனும் தொனிப் பொருளிலான இந்த பாதயாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. இதேவேளை, வாகன நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக…

Read More

ஆட்சியை கவிழ்க்கலாமென கனவு காண்கிறது மஹிந்த அணி

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என  மகிந்த தலைமையிலான குழுவினர் கனவு காண்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பாதயாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அமைத்து கூச்சல் போடுவதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியினரும் கனவு காண்கின்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது. பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல்…

Read More

நிழல் அமைச்சரவை: ‘வார்த்தை தவறியது’

ஒன்றிணைந்த எதிரணியின் நிழல் அமைச்சரவையானது, தவறான வார்த்தைப் பிரயோகத்தாலேயே பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, அந்த அமைச்சரவையின் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகியதும் அமைச்சரவையும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார். வென்னப்புவ, சிறிகம்பளை போதிருக்காராம விகாரையில் , சனிக்கிழமை இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய மஹிந்த, மேற்படி நிழல் அமைச்சரவை தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,…

Read More

பொறுத்திருந்து பாருங்கள் நடக்க உள்ளதை!

புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது, அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டு எதிர்கட்சி இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை இன்று பார்வையிட சென்ற போதே செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைய இருப்பதை தாம் மறுப்பதாகவும் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் புதிய கட்சி உருவாக்கப்பட மாட்டாது, மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ன நடக்க உள்ளது…

Read More

உள்ளூராட்சி தேர்தலில் தனித்தே போட்டி – மஹிந்த அணி திட்டவட்டம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாகவும் எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைய போவதில்லை  எனவும் கூட்டு எதிரணி சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. கொழும்பில் தற்போது -21- இடம்பெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணி இதனைத் தெரிவித்துள்ளது.

Read More

வெலிக்கடை சிறைச்சாலைக்கு படையெடுக்கும் கூட்டு எதிரணியின் எம்.பிக்கள்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். அவர்ளுடன், பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…

Read More