Headlines

ஹெலியில் சென்று பிரதமர் பார்வை

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார். இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும்,…

Read More

கரு ஜயசூரிய அனுதாபம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால்…

Read More

நாட்டில் இன்றும் கனமழைக்கான சாத்தியம்

நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே  500 கிலோ மீற்றர்  தொலைவில்  பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய…

Read More

வெள்ளப்பெருக்கு ; காத்தான்குடி பள்ளிவாயல்கள் விடுத்துள்ள அறிவித்தல்

-பழுலுல்லாஹ் பர்ஹான் – தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம். 2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது. அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி…

Read More

களனி பிரதேசத்தில் இன்று விமானப்படை மீட்புப் பணிகள்!

களனி ஆற்றின் வெள்ளம் காரணமாக வீடுகளில் சிக்கிக் கொண்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் இன்று விமானப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மல்வானை, களனி, கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் இந்த மீட்புப் பணிகள் இன்று முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்காக விமானப்படையினரின் இரண்டு ஹெலிகொப்டர்களில் மீட்புக்குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். களனி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் அதிகரித்த நீர் மட்டம் காரணமாக தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்….

Read More

மழையால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ‘இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்’ என சஜீத் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார். அவரது அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சொன்னார்.

Read More

26400 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் 26400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார். இடைப்போகத்திற்கென செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்களே நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மண்டூர் வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகப்படியான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீர் இருதினங்களுக்குள் வடியா விட்டால் செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில்…

Read More

சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி

தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று (18) காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 81 ஆயிரத்து 212 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் தலைநகரம் கொழும்பில் 35 ஆயிரத்து 513 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு

வத்தளைப் பிரதேசத்திலிருந்து இரண்டு சடலங்களை இன்று (18) மீட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவ்விரு சடலங்ளும் 16 மற்றும் 09 வயதுடைய சிறுவர்களுடையது என்றும், வெள்ளத்தினால் சிக்குண்டே இவ்விருவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Read More

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

-சுஐப் எம்.காசிம் – பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பின் பல இடங்களுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் சென்று பார்வையிட்டார். இந்தப் பிரதேசங்களில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்பது தொடர்பில் அமைச்சர் கடற்படைத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன் அவசரமாக படகுகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார். அமைச்சரின் கோரிக்கையை அடுத்து இன்று காலை (18/௦5/2016) இந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ள பிரதேசங்களுக்கு நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பல படகுகளை அங்கு…

Read More

அரநாயக்கவில் ஐந்து சடலங்கள் மீட்பு

மாவனல்லை, அரநாயக்க பிரதேசத்தில் நேற்றிரவு (17) ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் ஐந்து சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை தோன்றியிருந்தது. இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று கேகாலை புளத்கொஹுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில்…

Read More

வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளி : களனியில் சம்பவம்

நாட்டில் நிலவுகின்ற தொடர்ச்சியான  மழை வீழ்ச்சியின் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதேவேளை, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து ஆற்றை அண்டிய வீடுகளில்  முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இதனால்  களனி ஆற்றை அண்டிய மக்கள் பீதியுடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More