Headlines

இந்திய தேசத்துக்கு நாங்கள் துணை நிற்போம் – அஸாதுதீன் ஒவைஸி

பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ராணுவத்தினருக்கும், தேசத்துக்கும் துணை நிற்போம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைஸி தெரிவித்தார். இதுகுறித்து ஹைதாராபாதில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது:பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எங்கள் கட்சி எதிர்க்கும். இந்திய ராணுவத்துக்கும், தேசத்துக்கும் நாங்கள் துணை நிற்போம் என்றார் அவர்.

Read More

இந்தியாவிற்கு உரிய பதிலடி கொடுங்கள் – நவாஸ் ஷரீப்

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று(புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபையில் பேசுவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிடம் பேசி உள்ளார். ஐ.நா.சபையில் பேச உள்ள விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ரஹீல் செரீப்பிடம், நவாஸ் செரீப் பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு திறம்பட பதிலடி கொடுக்குமாறு ரஹீல் செரீபை, நவாஸ் ஷரீப் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Read More

தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்புள்ள சந்தேக நபர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசு,  தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும் என்று பல முறை கேட்டும் பயனில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் கூறி வருகிறது. எனவே, இது தொடர்பாக இந்தியா ஐ.நா. சபையில் புகார் கூறியது. மேலும் அவன் வசிக்கும் 9 முகவரிகளை கண்டுபிடித்து அதன் ஆதாரத்தையும் ஐ.நா….

Read More

மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்

பலுசிஸ்தானில் ‘பலூச் தேசிய இயக்கம்’ என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர். மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்கு முறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்நிலையில் பலுசிஸ்தான் பற்றிய மோடியின் பேச்சு எல்லையை மீறயது என்றும் நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது….

Read More

காஷ்மீர் பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் கடந்த வாரம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தூதர்கள் மாநாடு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்…

Read More

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது: பாகிஸ்தான்

காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும்…

Read More

ஐந்தே நிமிடங்களில் டெல்லியை தாக்கும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு உண்டு

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் அருகேயுள்ள கவுட்டா பகுதியில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக முன்னர் பொறுப்புவகித்த அப்துல் காதீர் கான்(80) பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பிதாமகன் என கருதப்படுகிறார். பாகிஸ்தான் முதன்முறையாக கடந்த 28-5-1988 அன்று ஐந்து அணுகுண்டுகளை பூமிக்கு அடியில் வெடிக்கவைத்து பரிசோதனை நடத்தியது. இந்த பரிசோதனைகளின் பாகிஸ்தான் பெரிய அளவில் வெற்றியை காட்டியது. உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையான ஆயுதபலம் தன்னிடம் இருப்பதாக…

Read More

இந்திய வெளி.அமைச்சர் சுஷ்மா வைத்தியசாலையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்று (26) பாகிஸ்தான் நாட்டு வெளிவிகார அமைச்சரை சந்தித்து பேச சுஷ்மா திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றிரவு, சுஷ்மாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சில பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதாகவும், தற்போது சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

றோ அதிகாரி கைது

இந்தியப் கடற்படையில் கடமைபுரியும்  இந்திய புலனாய்வுதுறை அதிகாரியொருவரை பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பாதுகாப்புப் படை கைதுசெய்துள்ளது. டான் செய்தி சேவையின் தகவல்களின்படி பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட றோ அதிகாரி, மேலதிக விசாரணைகளுக்காக  இஸ்லாமாபாத் நகரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். பலூசிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுடன்; தொடர்புபட்டிருப்பதுடன் பலூசிஸ்தான் பிரிவினைவாதக் குழுவுடன் இந்த உளவாளிக்குத் தொடர்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த உளவாளி,…

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More