Headlines

ஐந்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் கண்ட கொழும்பு வேறு : ரவுப் ஹகீம்

தென்கிழக்காசியாவின் மிகப் பிரதான நகர மையமாக கொழும்பு அமையப்போகின்றது எனக் குறிப்பிட்ட, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நகரமயமாக்களைப் பொறுத்தவரை வெளிப்படைத் தன்மை பேணப்படுவதோடு, தொழில்சார் திறமைகளுக்கேற்ப உரிய இடமளிப்பதற்கும், தனியார் துறை பங்களிப்புகளுக்கு வாய்ப்பளிப்பதற்கும் தனது அமைச்சு நடவடிக்கை எடுக்குமெனவும் தெரிவித்தார். கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் செயலமர்வின் 2015ஆம் ஆண்டுக்கான அங்குரார்பண நிகழ்வு கொழும்பு, பண்டநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் செவ்வாய்கிழமை (17)…

Read More

வெலிக்கடை சூட்டுச்சம்பவம்; விசாரணைக்கு குழு

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியசரசர் விமல் நம்புவாசம் தலைமையில், அசோக வியஜதிலக்க (ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர்), ஓய்வு பெற்ற நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.கே.லியனே ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு, இச்சம்பவம்…

Read More

ஜீவன் மெண்டிஸ் சிரித்தது ஏன்? ; வெளிவந்தது உண்மை

உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் நியூஸிலாந்து வீரரின் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துகொண்டு இருந்தமை சர்ச்சையை தொற்றியிருந்தது. கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கொரி ஹெனடர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த போது ஜீவன் மெண்டிஸ் அவரின் பிடியெடுபை நழுவ விட்டார். இதனையடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹென்டர்சன் 75 ஓட்டங்களை பெற்றதோடு போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் தன்மையை மாற்றியமைத்த கொரி…

Read More

தனியார் துறையின் சம்பளம் 15- 35 வீதத்தால் அதிகரிப்பு

தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கமைய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஏனைய நிறுவனங்களின் வருமானத்திற்கமைய அவர்களின் சம்பளம் 15…

Read More

வெலே சுதாவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் “வெலே சுதா“ என்கிற சமன் குமாரவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெலே சுதா ஆஜர்படுத்தப்பட்டார். பொலிஸார் சமர்ப்பித்த சாட்சியங்களையும், அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிமன்றம், அவரை மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. போதைப் பொருள் கடத்தலின் மூலம் 17 கோடி ரூபா பெருமதியான…

Read More

அதிகமான இலங்கை பணிப்பெண்களை பணியில் அமர்த்த மலேசியா தீர்மானம்

மலேசியாவின் வெளிநாட்டு பணிப்பெண் முகவர்கள் சங்க தலைவர் அந்நாட்டு இணையமொன்றிற்கு வெளியிட்ட கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து பணிப் பெண்களை அமர்த்துவது இலாபகரமானது எனவும், இதுவரைகாலமும் இந்தோனேஸிய பெண்களே அதிகளவில் மலேசியாவில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றி வந்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்தோனேஸிய பெண்களை பணியிலமர்த்துவது அதிக செலவு விரயமாகும் காரணத்தினாலேயே வேறு நாட்டு பெண்களை பணியிலமர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

மஹிந்தவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராக முன்னனி சோசலிச கட்சி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது….

Read More

புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் விஜயம் (படங்கள் இணைப்பு)

இர்ஷாத் றஹ்மத்துல்லா புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல) இன்று விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று உத்தியோகபூர்வ விஜமொன்றினை மேற்கொண்டு இங்கு வருகைத்தந்திருந்தார். இங்குள்ள தொழிற்சங்க பிரதி நிதிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.அதே வேளை அதிகாரிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தினார். நிறுவனத்தின்…

Read More

மஹிந்தவின் கனவுகள் சுக்குநூறாகியும் இனவாத சக்திகள் இன்னும் பாடம்கற்கவில்லை – YLS ஹமீட்டின் ஊடக அறிக்கை

அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்டின் ஊடக அறிக்கை மஹிந்த ராஜபக்ச பட்டும் தேறாதவர் என்ற பட்டியலில் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரச கட்டிலில் ஏற்றுவதற்காக சில கட்சிகளும், அமைப்புக்களும் பகிரதப் பிரயத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஓர் ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அதற்கான உரிமை உண்டு. ஆனாலும் தமது இலக்கை அடைவதற்காக இன்னுமொரு சமுகத்தை சீண்டி அல்லது மலினப்படுத்தி அதனை…

Read More

உலகில் உள்ள கணனிகளில் ”அமெரிக்காவின் உளவு மென்பொருள்” இருப்பது அம்பலமானது

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் (என்.எஸ்.ஏ.), வெஸ்டன் டிஜிடல், சீகேட், டொ’பா மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் கணனிகளின் ஹாட் டிரைவ்களில் உளவு மென்பொருளை மறைத்து வைத்திருக்கும் விடயம் அம்பலமாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு உலகில் இருக்கும் மிகப் பெரும்பான்மையான கணனிகள் ஊடே உளவு வேலையில் ஈடுபட முடியும் என்று ரஷ்யாவை மையமாகக் கொண்டு இயங்கும் கணனி பாது காப்பு மென்பொருள் தயாரிப்பு நிறு வனமான காஸ்பர்ஸ்கி கண்டறிந்துள்ளது. உலகில் உள்ள 30 நாடுகளின் தனி…

Read More

மைத்திரியின் இந்திய விஜயம் தொடர்பில் சீனா கருத்து

இந்தியா, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் மத்தியில் நட்புரிமையும் நல்லுறவும் நிலவுகிறது. இந்தியாவும் இலங்கையும் சீனாவை பொறுத்தவரை முக்கியமான நாடுகளாகும். இந்தநிலையில் இந்தியாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் அதேநேரம், இலங்கையுடனும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக சீன பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையும் இந்தியாவும் அணு உடன்படிக்கை உட்பட்ட பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டநிலையிலேயே சீனாவின் கருத்து வெளியாகியுள்ளது.

Read More

தனியார் ஆயுதக்களஞ்சியங்களுக்கு கோத்தபாயவே அனுமதி வழங்கினார்!

குற்றப்புலனாய்வுத் துறையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்சவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தின் போது அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தி;ல் கைப்பற்றப்பட்ட ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சியமும், காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட எவான்ட்காட் ஆயுதக் களஞ்சியமுமே இவையாகும். இந்த விடயம் தொடர்பில் மூன்று பேரைக் கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகள், கோத்தபாயவை விசாரணை செய்தனர்.

Read More