Headlines

இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று முதல் இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சேவை இடம்பெறவுள்ளது. வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளர்களின் சிரமத்தை குறைத்துக்கொள்ளும் விதத்தில் இன்று முதல் தொடர்ந்து இரவு 1௦ மணிவரை வெளிநோயாளர் சிகிச்சை வழங்கவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read More

தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது! காலியில் பிரதமர்

காலி பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த பிரதமர் காலி மாவட்ட ஐ. தே. க. ஆதரவாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காலி ஐ. தே. க. பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது. தென்பகுதி சுற்றுலா வளர்ச்சி குறித்தும் புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் பிரதமர் இங்கு கருத்துத் தெரிவித்ததார். அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் 3 பிரதான திட்டங்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துதல்,…

Read More

இலங்கை ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியார் ஜெயந்தியுடன் இந்தியா சென்றுள்ளார். டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிகளை, மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய…

Read More

பயணிகள் விமாணத்தில் ஜனாதிபதி மைத்திரியின், முதலாவது வெளிநாட்டு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர். ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி நாளை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படவுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ளார்.

Read More

மஹிந்த ராஜபக்ச வெட்கத்திற்கு, உள்ளாகும் நிலையேற்படும் – சுஜீவ சேனசிங்க

மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து போகும் என பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் தோல்வியை பொறுத்து கொள்ள முடியாது மகிந்தவின் வருகை குறித்து பேசி வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை .இழக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலரே அந்த கட்சியை அழிக்க போகின்றனர். மகிந்தவின் வருகை (இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மகிந்த தேரரின் வருகை) என்பது இலங்கையின்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றி ஆராய குழு வேண்டும்!

கடந்த நான்கு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைப் போல் அளுத்கமை…

Read More

பசிலை விசாரிக்க சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்: அரசாங்கம்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தற்போது தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். எனவே அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள…

Read More

இலங்கையில் மனித உரிமைகள் நிலை முன்னேறி விட்டது அமெரிக்கா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாதிபதி மைத்திரி இன்று இந்திய விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது  வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று ஞாயிறுக்கிழமை மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார். இந்தியப் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விஷேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அம் மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை உறுதி செய்வது போன்ற விடயங்கள்…

Read More

சிலியில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் தூதர் உள்பட மூவர் பலி

சிலி நாட்டின் ஆண்டஸ் மலைத்தொடரின் அடிவாரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் அந்நாட்டு முன்னாள் தூதர் உள்பட மூவர் பலியானார்கள். சாண்டியாகோவில் இருந்து 570 கி.மீ தொலைவில் உள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலைத்தொடரின் அடிவாரத்தில் விழுந்தவுடன் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. இதில் முன்னாள் தூதரும் தொழிலதிபருமான இடாலோ சுனினோ உள்பட மூவர் பலியானார்கள். ஒருவர் மட்டும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து உயிர் தப்பினார். உயிரிழந்தவர்களின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. காயமடைந்தவர்…

Read More

ஆத் சமூகத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்… திருக்குரானில் அறிவித்த அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அறியப்படுகின்றது… மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் ஆற்றலும பெரிய உடலும் கொண்டவர்கள்அல்லாஹ்வின் கட்டளைகள் ஏற்காமல் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் என குரானில் அறிவிக்கப்பட்டது.. திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று இதுவாகும்… மாஷா அல்லாஹ் … அல்லாஹு அக்பர்..

Read More

மஹிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து?

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய குழுவினர் மேற்கொண்டதாக கூறப்படும் சதி முயற்சிக்கான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

Read More